ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் சர்வதேச அறக்கட்டளை சந்தை 2022 இல் கைவினைப்பொருட்கள், சிலோன் தேநீர் மற்றும் உணவு வகைகளை இலங்கை காட்சிப்படுத்தல்

ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் சர்வதேச அறக்கட்டளை சந்தை 2022 இல் கைவினைப்பொருட்கள், சிலோன் தேநீர் மற்றும் உணவு வகைகளை இலங்கை காட்சிப்படுத்தல்

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை மற்றும் பல்வேறு தூதரகங்கள் மற்றும் நிரந்தரப் பணிமனைகள் இணைந்து வியன்னாவில் 2022 டிசம்பர் 03ஆந் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மகளிர் கில்ட் சர்வதேச அறக்கட்டளை சந்தை 2022 இல் பங்கேற்றன.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வருடாந்த நிகழ்வில் வியன்னாவை தளமாகக் கொண்ட 35 தூதரகங்கள் மற்றும் நிரந்தரப் பனிமனைகள் கலந்துகொண்டன.

உலகளவில் குழந்தைகளுக்கான தொண்டுத் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்தைப் போலவே, இலங்கை தேசிய கைவினைப் பேரவை, இலங்கை தேயிலை சபை, காதுக் கூம்பு முகவர் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றுமதியாளர், சிலோன் ஸ்டார் மற்றும் பசில்ருவுடன் இணைந்து வியன்னாவில் சிலோன் தேயிலை, கைவினைப்பொருட்கள் மற்றும் சமையல் இராஜதந்திரத்தை ஊக்குவிக்கவும் நிலைநிறுத்தவும் முடிந்தது.

இளம் கலைஞர்களின் நாகரீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இலங்கையித் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

வியன்னா

2022 டிசம்பர் 06

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close