ஐக்கிய அரபு இராச்சியத்துடன்இலங்கை வர்த்தக உறவுகளை ஊக்குவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்துடன்இலங்கை வர்த்தக உறவுகளை ஊக்குவிப்பு

துபாயில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் இணைந்து, 2022 டிசம்பர் 05 முதல் 09 வரை இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 12 உறுப்பினர்களைக் கொண்ட வணிகக் குழுவின் விஜயத்தை ஏற்பாடு செய்தது. இலங்கைத் தேயிலை, சுவையூட்டிப் பொருட்கள், பொதியிடல், தேங்காய் அடிப்படையிலான பொருட்கள், தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள், உணவுப் பொருட்கள் மற்றும் இறப்பர் சார்ந்த தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நிறுவனங்களை வணிகப் பிரதிநிதிகள் உள்ளடக்கியிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, துபாயில் உள்ள இலங்கை வர்த்தக சபை, ஷார்ஜா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் ராசல் கைமா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து வருகை தந்த தூதுக்குழுவினருக்கான விரிவான நிகழ்ச்சியொன்று துபாயில் உள்ள துணைத் தூதரக அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருகை தரும் பிரதிநிதிகளின் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் சந்தை குறித்த விளக்க அமர்வு 2022 டிசம்பர் 05ஆந் திகதி, துணைத் தூதுவர் நளிந்த விஜேரத்ன, தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஷிஹாம் மரிக்கார், துபாயில் உள்ள இலங்கை வர்த்தக சபையின் தலைவர் ரிஸா மொஹமட் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் துணைத் தூதரக வளாகத்தில் நடைபெற்றது. தூதரகத்தின் பொது அலுவலகம், இலங்கை வர்த்தக சபையுடன் இணைந்து, இரு நாடுகளின் வணிக சமூகங்களுக்கிடையில் வலையமைப்பை எளிதாக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலக்கு வணிக முயற்சிகளுடன் பல வணிக சந்திப்புக்களை ஏற்பாடு செய்தது.

வருகை தந்த தூதுக்குழு 2022 டிசம்பர் 06ஆந் திகதி ஷார்ஜா வர்த்தக மற்றும் தொழில் சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக மன்றம் மற்றும் வணிகக் கூட்டங்களில் பங்கேற்றது. ஷார்ஜா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹமட் அஹமட் அமீன் அல் அவாடி மற்றும் ஷார்ஜா வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் வர்த்தக மற்றும் தொடர்பாடல் துறைக்கான உதவிப் பணிப்பாளர் நாயகம் அப்துல் அஸீஸ் ஷத்தாஃப் ஆகியோர் இலங்கைக் குழுவை வரவேற்றனர்.

2022 டிசம்பர் 08ஆந் திகதி ராஸ் அல் கைமா எமிரேட்டில் வணிக மன்றம் மற்றும் வணிகக் கூட்டங்களில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ரசல் கைமா வர்த்தக மற்றும் தொழில்துறை வணிக சபையின் தலைவர் மொஹமட் அலி முசபே அல் நுஐமி மற்றும் ஆர்.ஏ.கே. சபையின் முதல் துணைத் தலைவர் மற்றும் அறையின் பணிப்பாளர்கள சபையின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் ராஸ் அல் கைமா வர்த்தக மற்றும் தொழில்துறை அறையில் நடைபெற்றது. பல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சமூகத்துடன் இணைந்து ஆர்.ஏ.கே. சபை ஏற்பாடு செய்த வர்த்தக மன்றத்தில் பிரதிநிதிகள் குழுவும் இணைந்தது.

ஷார்ஜா வணிக சபை மற்றும் ராஸ் அல் கைமா வணிக சபை ஆகியவற்றில் நடைபெற்ற அதிகார மட்டத்திலான கூட்டங்களின் போது, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் ராசல் கைமா எமிரேட், ஷார்ஜா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வணிக சமூகங்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துதல் குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர். ஆர்.ஏ.கே. சபை மற்றும் ஷார்ஜா சபைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், ராசல் கைமாவில் உத்தேச இலங்கை வர்த்தகக் கண்காட்சியை உள்ளடக்கிய எதிர்கால இருதரப்பு ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் தமது முழுமையான ஒத்துழைப்பை மீண்டும் உறுதி செய்தனர்.

இலங்கைத் தூதுக்குழுவினரின் விஜயம் மற்றும் இரு எமிரேட்டுகளின் நிகழ்ச்சிகள், இரு நாடுகளினதும் வர்த்தக சமூகங்களுக்கிடையில் வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கு புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்கான வழிகளை நிறுவும் அதே வேளையில் பல்வேறு தொழில்துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கான ஒரு தளத்தை வருகை தந்த குழுவினருக்கு வழங்கியது.

 

இலங்கையின் துணைத் தூதரகம்,

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ்

 

2022 டிசம்பர் 16

 

16 December 2022

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close