ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு கூட்டத்தில்  இலங்கை பங்கேற்பு

ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு கூட்டத்தில்  இலங்கை பங்கேற்பு

ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பன்னாட்டு மன்றமான ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு கூட்டம் மெய்நிகர் இணைய வழியில்  2023 ஏப்ரல் 19ஆந் திகதி நடைபெற்றது.

இலங்கைத் தூதுக் குழுவுக்கு வெளிவிவகார பதில் செயலாளர் யசோஜா குணசேகர தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு கஸகஸ்தான் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் கனத் துமிஷ் தலைமை தாங்கினார். ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு,  பிராந்திய அரசாங்கங்களுக்கிடையேயான ஆசியாவின் மிகப்பெரிய மன்றமாகும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு.

2023 ஏப்ரல் 20​

Please follow and like us:

Close