2023 செப்டம்பர் 6-9 தேதிகளில் நடைபெற்ற உலக உணவு இஸ்தான்புல் வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பு

2023 செப்டம்பர் 6-9 தேதிகளில் நடைபெற்ற உலக உணவு இஸ்தான்புல் வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பு

இஸ்தான்புல்லில், 2023 செப்டம்பர் 6 முதல் 9 வரை நடைபெற்ற TÜYAP கண்காட்சி மற்றும் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற உலக உணவு இஸ்தான்புல் வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பை Türkiye இல் உள்ள இலங்கை தூதரகம் ஒருங்கிணைத்தது.

வரையறுக்கப்பட்ட தனியார் சிலோன் டீ லேண்ட் , வரையறுக்கப்பட்ட தனியார் யுனிவேர்ல்ட் டீஸ், வரையறுக்கப்பட்ட தனியார் ஹெரிடேஜ் டீஸ் மற்றும் வரையறுக்கப்பட்ட தனியார் விண்டேஜ் டீஸ் சிலோன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புக்கள், Türkiye இலுள்ள இலங்கை தூதரகத்தின் ஆதரவுடன் இலங்கை தேயிலை வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிலோன் டீ’ பெவிலியனில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், வரையறுக்கப்பட்ட தனியார் MJF எக்ஸ்போர்ட்ஸ், வரையறுக்கப்பட்ட தனியார் Imperial Teas Group of Companies மற்றும் McCoy Ceylon Commodities ஆகிய நிறுவனங்களும் தேயிலை துறையை பிரதிநிதித்துவப்படுத்தின. மேலும்,வரையறுக்கப்பட்ட தனியார் NDC Exports மற்றும் வரையறுக்கப்பட்ட தனியார் De Coco Products தேங்காய் சார்ந்த உணவுப் பொருட்களை கண்காட்சியில் காட்சிப்படுத்திஇருந்தன.

இக்கண்காட்சி யூரேசியாவின் மிகப்பெரிய உணவு மற்றும் பானங்கள் துறை கண்காட்சியாவதுடன், இது உலகளவில் மிகப்பெரிய உணவு மற்றும் பானங்கள் துறை கண்காட்சிகளில் ஒன்றாக மாறவுள்ளது. 30 ஆண்டுகளாக, இவ்வுலக உணவு இஸ்தான்புல் வர்த்தக கண்காட்சியானது, உணவு மற்றும் பான உற்பத்தியாளர்கள் மற்றும் Türkiye இன் முக்கிய வாடிக்கையாளர்களின் சந்திப்பு மையமாக இருந்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு துருக்கிய உணவுத் துறையை ஆராயவும், முக்கியமான தொழில்துறை பிரமுகர்கள் மற்றும் வாங்குபவர்களுடன் பிணைப்பை உருவாக்கவும், புதிய சந்தையில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் இது சிறந்த இடமாகும். வணிகத்திற்கு வணிகம் சந்திப்பு நிகழ்வாக,  உலக உணவு இஸ்தான்புல் வர்த்தக கண்காட்சியானது, Türkiye இன் இறக்குமதித் துறையில், ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் உணவு  விற்பனையை வளர்ப்பதற்கும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் சரியான தளமாக விளங்குகிறது.

உலக உணவு இஸ்தான்புல் வர்த்தக கண்காட்சி என்பது பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பண்டக்குறிகளை அறிமுகப்படுத்துமொரு தளமாவதுடன், மேலும் உற்பத்தியாளர்கள் முதல் தொழில்முயற்சியாளர்கள் வரை அனைத்து பங்குதாரர்களாலும் உணவு மற்றும் பானத் துறை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. 2022, இல், 25 நாடுகளிலிருந்து, 835 கண்காட்சியாளர்கள் மற்றும் 163 நாடுகளிலிருந்து 38,358 பார்வையாளர்கள் உலக உணவு இஸ்தான்புல்லில் கலந்துகொண்டனர். 2023 கண்காட்சிக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உலக உணவு இஸ்தான்புல்லில் கலந்துகொண்ட அதேவேளை, துர்க்கியேவிலுள்ள, இலங்கை தூதரகத்தின் அமைச்சர் (வணிக)  தவிஷ்ய முல்லேகம்கொட, இஸ்தான்புல்லில் அமைந்துள்ளவெளிநாட்டு பொருளாதார தொடர்புகள் வாரியம் (DEIK), இஸ்தான்புல் வர்த்தக சங்கம், சுதந்திர வர்த்தக சங்கம் மற்றும் வர்த்தகர் சங்கம் (MÜSİAD) , துருக்கிய பிரயாண முகவர் சங்கம் (TÜRSAB), துருக்கிய தொழில் மற்றும் வணிக சங்கம் (TÜSİAD) மற்றும் Türkiye ஏற்றுமதியாளர்கள் சபை (TİM) ஆகியவற்றுடன், பரஸ்பர நன்மை பயக்கும் சந்திப்புகளை மேற்கொண்டார்.

இலங்கை தூதரகம்

அங்காரா

11 செப்டம்பர் 2023

Please follow and like us:

Close