தாய்லாந்தில் நடைபெறும் ஒரு தபோன் ஒரு தயாரிப்பு நகரம் - 2022 இல் இலங்கை முதன்முறையாக பங்கேற்பு

 தாய்லாந்தில் நடைபெறும் ஒரு தபோன் ஒரு தயாரிப்பு நகரம் – 2022 இல் இலங்கை முதன்முறையாக பங்கேற்பு

தாய்லாந்தின் உள்துறை அமைச்சின் சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆலோசனையில் பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை முதன்முறையாக தேசிய கைவினைப் பேரவை, நறுமணப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபை, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி  சபை மற்றும் கைவினைப் பொருட்கள் சபை ஆகியவற்றிலிருந்து இலங்கைத் தயாரிப்புக்களை 'ஒரு தபோன் ஒரு தயாரிப்பு நகரம் - 2022' இல் 2022 டிசம்பர் 17 - 25 வரை தாய்லாந்தின் நோந்தபுரியில் உள்ள இம்பெக்ட் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தாய்லாந்தில் ஒரு தபோன் ஒரு தயாரிப்பு என்ற கருத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்களை விளம்பரப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 'ஒரு தபோன் ஒரு தயாரிப்பு நகரம் - 2022' ஆனது 'ஞானத்திலிருந்து மகிழ்ச்சியைக் கொடுத்து, தாய்லாந்து மக்களின் கைவினைத்திறனின் மதிப்பைக் கடத்துதல்' என்ற கருத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டது. தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தொடங்கி வைத்த இந்த நிகழ்வு 200,000 பார்வையாளர்களை ஈர்த்தது. 2,700க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்றனர்.

போதுமான பொருளாதார தத்துவத்தின் கீழ், தாய்லாந்து சர்வதேச ஒத்துழைப்பு முகவரமைப்பின் நிதியுதவியுடன் 'ஒரு கிராமம் ஒரு தயாரிப்பு' என தாய்லாந்து தனது ஒரு தபோன் ஒரு தயாரிப்பு நகரம் என்ற கருத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவின் 2018 க்கான இலங்கை விஜயத்தின் போது இரு தரப்பும் கூட்டு நடவடிக்கை திட்டத்தில் நுழைந்துள்ளன.

பிரதிப் பிரதமரும் தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினாய் இலங்கை பெவிலியனைப் பார்வையிட்டதுடன் இலங்கைப் பொருட்களைப் பார்த்துக் கவரப்பட்டார். இந்த அரங்கு பொதுமக்களின் பல பார்வையாளர்களையும் ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியுடன் இணைந்து, தாய்லாந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்து ஒரு தபோன் ஒரு தயாரிப்பு வர்த்தகர்களை இலங்கை கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் (சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி) ஏ. லக்கதாஸ் மற்றும் தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல ஆகியோர் மெய்நிகர் ரீதியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தூதரகம் மேற்கொண்டது. தாய்லாந்து உள்துறை அமைச்சின் சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தனது வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தனித்துவமான வாய்ப்புக்காக, தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவரும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன, உள்துறை அமைச்சின் பிரதி நிரந்தர செயலாளர் சோம்கிட் சாந்தமருக் மற்றும் சமூக அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அன்சிட் சம்புந்தரத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் / தலைவர் ஏ.டபிள்யூ.எஸ். சமன்மாலி மற்றும் முதல் செயலாளர் (வணிகம்), விரேஷிகா பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 டிசம்பர் 30

Please follow and like us:

Close