ஸ்பெயினின் மட்ரிட்டில் உள்ள எப்.ஐ.டி.யு.ஆர். இன்டர்நெஷனல் டிராவல் மார்ட்டில் இலங்கை பங்கேற்பு

ஸ்பெயினின் மட்ரிட்டில் உள்ள எப்.ஐ.டி.யு.ஆர். இன்டர்நெஷனல் டிராவல் மார்ட்டில் இலங்கை பங்கேற்பு

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் ஸ்பெயினின் மட்ரிட் நகரில் 18-22 வரை நடைபெற்ற எப்.ஐ.டி.யு.ஆர். இன்டர்நெஷனல் டிராவல் மார்ட்டின் 42வது பதிப்பில் வெற்றிகரமாக பங்கேற்றது. எப்.ஐ.டி.யு.ஆர். மட்ரிட் ஏற்பாடு செய்த சுற்றுலாவுக்கான உலகின் முன்னணி வர்த்தகக் கண்காட்சிகளில் ஒன்றான இந்த கண்காட்சியில் 8360 கண்காட்சி நிறுவனங்கள், 82,000 வர்த்தகப் பங்கேற்பாளர்கள் மற்றும் 30,000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹூ மற்றும் பார்சிலோனாவில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் அகஸ்டின் லானாஸ் மற்றும் இலங்கை பயண தொழில்தருனர்களுடன் இணைந்து இலங்கைக் கூடம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக் கூடம் நாட்டின் வளமான கலாச்சாரம், இயற்கை அழகு, ஆயுர்வேதம் மற்றும் ஏனைய சாத்தியமான சுற்றுலா சலுகைகளை உயர்த்திக் காட்டியது. ஸ்பெயின் சந்தையில் உற்பத்தியை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சிலோன் தேயிலை பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கண்காட்சியை ஒட்டி, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியக அதிகாரிகள் உலக சுற்றுலா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன், இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்காக ஆசியப் பிராந்தியத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹரி ஹூவாங் மற்றும் பசிபிக் ஐ.நா. உலக சுற்றுலா அமைப்புடன் கலந்துரையாடினர். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை வர்த்தக சந்திப்புக்கள், பிரத்தியேக ஊடக நேர்காணல்கள் மற்றும் விமான சந்திப்புக்கள் ஆகியவற்றை கண்காட்சியில் ஏற்பாடு செய்தன.

2022ஆம் ஆண்டில் 12,895 ஸ்பானிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதால், ஸ்பெயின் இலங்கை சுற்றுலாவிற்கு அதிக வாய்ப்புள்ள சந்தையாகக் கருதப்படுகிறது. எப்.ஐ.டி.யு.ஆர். இல் பங்கேற்றமை மற்றும் கண்காட்சியின் போது ஊடகங்களுடனான ஈடுபாடு ஆகியன புதுப்பிப்புக்களை முன்னிலைப்படுத்தவும் இலக்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வாய்ப்பளித்தன. கண்காட்சியில் வெற்றிகரமாகப் பங்கேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்கு பிரான்சில் உள்ள இலங்கைத் தூதரகம் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது.

இலங்கைத் தூதரகம்,

பாரிஸ்

2023 ஜனவரி 30

Please follow and like us:

Close