இலங்கை உயர்ஸ்தானிகரின் மலாக்கா மாகாண ஆளுநருடனான சந்திப்பு

இலங்கை உயர்ஸ்தானிகரின் மலாக்கா மாகாண ஆளுநருடனான சந்திப்பு

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் மலாக்கா மாநில ஆளுநர் கலாநிதி மொஹமட் அலி பின் முகமட் ருஸ்தம் ஐ, 2023, செப்டம்பர் 27 அன்று, மலாக்காவில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டார்.

உயர்ஸ்தானிகர் மற்றும் மலாக்கா ஆளுநருக்கு இடையிலான கலந்துரையாடலானது, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்குமான வேலை வாய்ப்புகள் மற்றும் இலங்கைக்கும் மலாக்கா மாநிலத்திற்கும் இடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. மலாக்கா மாநிலத்திற்கான இந்த முக்கியமான விஜயத்தின் நினைவாக ஆளுநர் அலுவலக வளாகத்தில் உயர்ஸ்தானிகர் டயஸ் மரமொன்றை நட்டார்.

உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகரும், சான்சரி அதிபருமான எம்.ஐ.எம். ரிஸ்வி உயர்ஸ்தானிகருடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டார்.

 

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

கோலா லம்பூர்

2023, அக்டோபர் 16

Please follow and like us:

Close