கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து, தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 நவம்பர் 25ஆந் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகள் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில், தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் சாத்தியமான பொருத்தம் குறித்து இலங்கையில் புதுப்பிக்கப்பட்ட இடைக்கால நீதித் திட்டங்களிலான ஒரு வட்ட மேசை அமர்வை ஏற்பாடு செய்தது. தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுடனான சந்திப்பின் போது (நவம்பர் 29ஆந் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்த போது) அத்தகைய ஒரு புதுப்பிக்கப்பட்ட முயற்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரால் பரிந்துரைக்கப்பட்டது.
தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயன்முறையில் தென்னாபிரிக்காவின் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் (இவர் இதற்கு முன்னர் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராக பதவி வகித்தவர்) தூதுவர் ஜெஃப்ரி டோய்ட்ஜ், தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசியலமைப்பு விவகாரங்கள் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ரோல்ஃப் மேயர் மற்றும் தென்னாபிரிக்காவின் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நிறுவனத்தின் சிரேஸ்ட உறுப்பினர் கலாநிதி. ஃபனி டு டோயிட் ஆகிய மூன்று சிறந்த நிபுணர்கள் மெய்நிகர் ரீதியாக பங்கேற்பதற்கு உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தது.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகள் நிறுவனர்ரின் பணிப்பாளர் கலாநிதி லக்சிறி மெண்டிஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் பல பிரபல சட்டத்தரணிகள், தூதுவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் கொழும்பில் உள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பேராசிரியர் காமினி குணவர்தன கலந்துரையாடலை நெறிப்படுத்தினார். தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் இலங்கைக்கு முற்றிலும் புதியவையல்ல, ஆனால் தற்போதைய கட்டத்தில் ஒரு புதிய முயற்சி பரிசீலனையில் உள்ளதாக அவர் தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் செயன்முறையிலிருந்து இலங்கை எதைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் இடம்பெறுவதாகத் அவர் மேலும் தெரிவித்தார்.
தென்னாபிரிக்கா நிபுணர்களின் தொழில்முறை ரீதியாக சிறந்த விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்றம் நடைபெற்றது. நிகழ்வு மற்றும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த இலங்கைப் பத்திரிகையொன்றின் விரிவான அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
பிரிட்டோரியா
2022 டிசம்பர் 19