மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ICWC2023 கண்காட்சியில் செழுமையான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் காட்சிப்படுத்துகிறது

 மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ICWC2023 கண்காட்சியில் செழுமையான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் காட்சிப்படுத்துகிறது

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், 2023 செப்டம்பர் 08 - 09, தினங்களில் நடைபெற்ற ICWC2023 கண்காட்சியில், பங்குபற்றியது. இலங்கையின் பலதரப்பட்ட கலாசார சித்திரங்களை காட்சிப்படுத்தவும், அற்புதமான அழகை உலகறியச்செய்யவும் இக்கண்காட்சி ஒரு தளமாக செயல்பட்டது.

கண்காட்சியின் போது, ​​இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நாட்டின், செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்  போன்றவை உள்ளடக்கிய காட்சிப்பொருட்கள் பார்வையாளர்களை வசீகரித்தது. அனைத்து காட்சிப்பொருட்களின் மத்தியிலும், பாரம்பரிய மர முகமூடிகள் (வெஸ்மூணு), மிக நுட்பமான வேலைப்பாடுகளையும், குறியீட்டு ரீதியான முக்கியத்துமுடையதுமாக இருப்பதால், சிறப்பம்சம் வாய்ந்தவையாக விளங்கின. இக்கண்கவரும் முகமூடிகள், இலங்கை பாரம்பரிய கலைகளில் வேரூன்றிய ஒன்றாக இருப்பதுடன், இலங்கையின் பாரம்பரியக் கலையை திரும்பிப்பார்க்க செய்ததோடுமட்டுமல்லாமல், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

மேலதிகமாக, இலங்கை உயர் ஸ்தானிகராலயம் நாட்டின் பெறுமதிமிக்க ஏற்றுமதிப் பொருட்கள் இரண்டான மரமுந்திரி மற்றும் உலக பெயர்பெற்ற சிலோன் தேநீர் என்பனவற்றை  காட்சிப்படுத்தியிருந்தது. இத்தயாரிப்புக்களின், தனித்துவமான சுவையும், நிகரற்ற தரமும் பார்வையாளர்களின், கவனத்தையும் பாராட்டையும் பெற்றன.

ஒருங்கிணைந்த அங்கமாக விளங்கிய, Gala Buffet இல், இலங்கை உயர்ஸ்தானிகராலயமானது, இலங்கைக்கு உரித்தான, இலங்கையின் பாரம்பரிய சமயற்கலையின் தனிச்சிறப்பை எடுத்துக்கூறும், மூன்று பாரம்பரிய உணவுகளான, "ஹெல்ப்ப", "கட்லெட்", மற்றும் "கொக்கிஸ்" ஆகியவற்றை, காட்சிப்படுத்தியிருந்தது.

மலேசியாவில் இடம்பெற்ற, ICWC2023 இல், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பங்கேற்பு, இலங்கையின் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கான மற்றும் இருதரப்பு உறவுகளை நிறுவுவதற்கான அர்ப்பணிப்பின் சான்றாக அமைந்தது. இந்நிகழ்வானது, இலங்கை மற்றும் மலேசியாவிற்கிடையிலான கலாச்சார பரிமாற்றத்தை ஆழப்படுத்தவும், பரஸ்பர புரிதலை வளர்க்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

கோலாலம்பூர்

14 செப்டம்பர் 2023

 

Please follow and like us:

Close