ஷாங்காயில் இலங்கையின் ரத்தினக் கண்காட்சி மற்றும் விற்பனை

ஷாங்காயில் இலங்கையின் ரத்தினக் கண்காட்சி மற்றும் விற்பனை

NN Gems மற்றும் Beauty Lanka Gems & Jewelleries உட்பட இலங்கையின் புகழ்பெற்ற இரத்தினக்கல் மற்றும் நகை நிறுவனங்களின் பங்கேற்புடன், 2023, செப்டெம்பர் 19 அன்று, உள்ள ஷாங்காய் இன், Jinmao கட்டிடத்திலுள்ள துணைத்தூதர் கழகத்தில், இலங்கை ரத்தினக் கண்காட்சி மற்றும் விற்பனை வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கையின் உள்நாட்டு ரத்தினக் கற்கள் நிறுவனங்களுக்கு, சீன சந்தையில் இரத்தினக் கற்களை அறிமுகப்படுத்துவதற்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கண்காட்சி இடம்பெற்றது. பங்கேற்பாளர்கள் நீலக்கல், மாணிக்கம், டோமளீன் கல், ஸ்பினல் கல், வைடூரியம் போன்ற உயர்தர ரத்தினங்களை காட்சிப்படுத்தினர்.

ஷாங்காயில் உள்ள துணைத்தூதுவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத்துணைகள், பல உயர்மட்ட வாடிக்கையாளர்கள், ரத்தினக் கல் சேகரிப்பாளர்கள் மற்றும் ஷாங்காய் நகரில் உள்ள சைனா டயமண்ட் மற்றும் ஷாங்காய்-ஜெம் எக்ஸ்சேஞ்சின் உறுப்பினர்கள் ஆகியோர் இக்கண்காட்சியில் பங்கேற்றனர்.

ஷாங்காயில் உள்ள இலங்கையின் துணைத்தூதுவர், அனுர பெர்னாண்டோ, அதிதிகளை வரவேற்று உரையாற்றியதுடன், இரு நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கியிருந்தார்.

உரையைத் தொடர்ந்து, இலங்கையின் ரத்தினக் கற்கள் குறித்து, வாங்குவோர் மற்றும் ரத்தின ஆர்வலர்களை அறிவூட்டும் வகையில், இலங்கையின் ரத்தினக் கற்களின் வரலாறு மற்றும் மேன்மையை விளக்கும்  காணொளியொன்று திரையிடப்பட்டது. கண்காட்சியின் போது, இலங்கை தொடர்பான சுற்றுலா காணொளிகள் மற்றும் இலங்கை ரத்தினக் கற்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இலங்கையில் இருந்து இரத்தினக் கற்களை கொள்வனவு செய்வதற்கும் எதிர்காலத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்வதற்கும் பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு ஏற்படுத்திக்கொடுத்தது. இலங்கையின் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் பற்றிய விழிப்புணர்வையும் இந்நிகழ்வு ஏற்படுத்தியது.

இந்நிகழ்வு இலங்கையின் துணைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன்,   ஷாங்காய் நகரில் உள்ள சைனா டயமண்ட் & ஜெம் எக்ஸ்சேஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணை அனுசரணை வழங்கின.

நிகழ்வின் நிறைவில், துணைத்தூதுவர் பெர்னாண்டோ, ஷாங்காய் துணைத்தூதர் கழகத்திற்கு, கண்டி எசல ஊர்வலத்தின், முழுமையாக அலங்கரிக்கப்பட்ட யானையின் நுட்பமான மாதிரி ஒன்றை வழங்கினார். ஷாங்காய் துணைத்தூதர் கழகத்தின், சார்பாக இந்த பரிசை பிஜியின் ஷாங்காய் தூதரகத்தின் இராஜதந்திர தூதர் படைத்தலைவர், யோக் யீ சென் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை துணைத் தூதரகம்

ஷாங்காய்

2023 செப்டம்பர் 21

Please follow and like us:

Close