கராச்சியில் நடைபெற்ற இலங்கை உணவுத் திருவிழாவில் தீவின் செல்வாக்குமிக்க வளமான சமையல் பாரம்பரியத்தின் வெளிப்பாடு

 கராச்சியில் நடைபெற்ற இலங்கை உணவுத் திருவிழாவில் தீவின் செல்வாக்குமிக்க வளமான சமையல் பாரம்பரியத்தின் வெளிப்பாடு

மெரியட் ஹோட்டல் மற்றும் குவாலிட்டி இவென்ட் வரையறுத்த தனியார் நிறுவனத்துடன்  இணைந்து கராச்சியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இலங்கையின் வளமான சமையல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் 2023 செப்டெம்பர் 09 முதல் 10 வரை கராச்சியில் உள்ள மேரியட் ஹோட்டலில் இலங்கை உணவு திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. உணவு திருவிழாவில் பாரம்பரிய இலங்கை உணவு மற்றும் சிலோன் தேநீர் காட்சிப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூறும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இவ்வுணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாண உள்துறை அமைச்சர், ஹரிஸ் நவாஸ் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இவ்விழா, சுமார் 150 விருந்தினர்களை ஈர்த்திருந்தது.

இந்நிகழ்வில், சந்தன விக்கிரமசிங்க , நடனக் கலைஞர்களடங்கிய குழு  மற்றும் இலங்கை பாடகர் சொனால்  பிரபாஷித ஆகியோர் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் மனதை கவர்வனவாக அமைந்தன. இந்நிகழ்ச்சிகள் விருந்தினர்களுக்கு இலங்கையின் கலைநயத்தின் சுவையை வழங்கியதுடன், கொண்டாட்டத்திற்கு கலாச்சார மற்றும் கலை பரிமாணத்தை சேர்த்தது.

இந்த நிகழ்வுக்கு பாகிஸ்தானிலுள்ள முக்கிய ஊடகங்களிலிருந்து விரிவான விளம்பரம் பெற்றமை, நிகழ்வின்  முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கை துணைத் தூதரகம்

கராச்சி

25 செப்டம்பர் 2023

 

Please follow and like us:

Close