இலங்கை தூதரகம் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் சமையல்கலை தொடர்பில் பிரேசிலில் நிகழ்த்திய விளம்பர மேம்பாடு

 இலங்கை தூதரகம் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் சமையல்கலை தொடர்பில் பிரேசிலில் நிகழ்த்திய விளம்பர மேம்பாடு

பிரேசிலிலுள்ள இலங்கைத்தூதரகம் இலங்கையின் சுற்றுலாத்துறை, சமையல்கலை, மற்றும் சிலோன் தேநீர் போன்றவற்றை 2023 ஆகஸ்ட் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று Museu de Arte de Brazilila வில் நடைபெற்ற Asian மற்றும் Oceania நாடுகளின் வருடாந்த சந்தையில், (Annual Bazaar ) மேம்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிகழ்வில் அரேபிய கூட்டிணைவு, இந்தியா, இந்தோனேஷியா, மியன்மார், நேபாள், பாகிஸ்தான், பாலஸ்தீன், சிங்கப்பூர், இலங்கை, சிரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் பங்குபற்றின.

இலங்கையின் விற்பனைச்சாவடியானது பிரசித்தி வாய்ந்த இடங்களின் படங்கள், கைவண்ணப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள், சிலோன் தேயிலை மற்றும் இலங்கையின் பலதரப்பட்ட உணவுப்பொருட்கள் போன்றவற்றினால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை பற்றி போர்த்துகீசிய மொழியிலான கையேடுகள், சந்தையை நோக்கி ஈர்க்கப்பட்டு, வருகைதந்திருந்த அண்ணளவாக 3000 விருந்தினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இலங்கை விற்பனைச்சாவடியில் மிகநீளமான வரிசைகளில் மக்கள் இலங்கை உணவை உண்டு களிப்பதற்காக காத்திருந்தனர். மேலும் அவர்களுக்கு சிலோன் தேநீர்க்கோப்பையொன்றை பருகும் வாய்ப்பும் அமைந்தது.

மக்கள் கூட்டமானது, சீரான கால இடைவெளிகளில் பாரிய இலத்திரனியல் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட உல்லாசப்பயணிகள் நாடும் இடமான இலங்கை மற்றும் கண்டிய நடன காணொளிகளை கண்டுகளித்த மக்கள் கூட்டம், இலங்கையின் பால் ஈர்க்கப்பட்டார்கள்.

இலங்கை தூதரகம்

பிரேசில்

2023 ஆகஸ்ட் 23

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close