இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம், தூதர் பணியக (கோன்ஸ்யூலர்) சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் பெற்றோருடன் சமூகமளிக்கும், சிறுவர்களுக்கான சிறுவர் தொகுதியொன்றை தொடங்கி வைத்தது.
இச்சிறுவர் தொகுதி தொடக்க விழாவில், டெல் அவிவ் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், பங்கு கொண்டனர். இச்செயற்றிட்டத்தற்கு சஞ்சீவனி லலித் பதிராஜா எனும் ஜெருசலேம் வாழ் நபரின் ஒத்துழைப்பு கிடைத்தது.
இச்சிறுவர் தொகுதியின் நோக்கமானது, சிறுவர்களை சித்திரம் வரைதல், களிமண் சிலை வடித்தல், விளையாட்டு கட்டுமாணக் கட்டிகளில் விளையாடுதல் மற்றும் புத்தகம் வாசித்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் வினைத்திறனானதும், ஆக்கபூர்வமானதுமான தொடர்ச்சியான ஈடுபாட்டில் வைத்திருப்பதாகும். இலங்கை தொடர்பான புத்தகம் சார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் ஏனைய அரச நிறுவன பிரசுரங்களின் பல்வேறு மொழியாக்கத்திலான வாசிப்பு மூலங்கள் சிறுவர்கள் வாசித்து பயன்பெறும் வண்ணம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இலங்கை தூதரகம்
டெல் அவிவ்
2023 ஆகஸ்ட் 31