இலங்கை தூதரகம் இத்தாலியின் Lecce இல் நடமாடும் கொன்ஸ்யூலர் சேவையை நடாத்தியமை

 இலங்கை தூதரகம் இத்தாலியின் Lecce இல் நடமாடும் கொன்ஸ்யூலர் சேவையை நடாத்தியமை

இலங்கை சமூகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம், 2023 செப்டம்பர் 02-03 ஆகிய தினங்களில், தூதுவர் ஜகத் வெள்ளவத்தையின் வழிகாட்டலின் கீழ் லெஸ்ஸில், புக்லியா பிராந்தியத்தில் வசிக்கும்/ தொழில் புரியும் இலங்கை சமூகத்திற்காக நடமாடும் கொன்ஸ்யூலர் சேவையை .வழங்கியது.

Lecce இல், தூதரகத்தால் நடத்தப்பட்ட முதல் நடமாடும் கொன்ஸ்யூலர் சேவையை வழங்கியமை, இலங்கை சமூகத்துடன், குறிப்பாக Lecce இல், கணிசமான அளவில் வாழும் இலங்கை தமிழர்களுடன், நல்லிணக்கத் தொடர்புகளை நிறுவுவதற்கான சிறந்ததொரு வாய்ப்பாக அமைந்தது.

இந்நடமாடும் சேவையின் போது, ​​ புதிய கடவுச்சீட்டுக்காக விண்ணப்பித்திருந்த சுமார் 250 இலங்கையர்களுக்கு, கடவுச்சீட்டு புதுப்பித்தல், கடவுச்சீட்டு புறக்குறிப்பிடுதல், அவசர கடவுச்சீட்டுகள், பிறப்புப் பதிவுகள், குடியுரிமைச் சான்றிதழ்கள், வழக்கறிஞரின் அதிகாரச், சான்றொப்பங்கள், திருமணங்களுக்கான ஆட்சேபனை இல்லாக் கடிதங்கள் (Nulla Osta) பொலிஸ் அறிக்கைகள், இலங்கை ஆவணங்களின் மொழிபெயர்ப்புகள் போன்ற சேவைகளை வழங்கியது.

மேலும், தூதுவர், Lecce இன் ஆளுநர் கார்லோ எம் சல்வெமினி மற்றும் Lecce இன் ஆணையாளர் வின்சென்சோ மாசிமோ மோடியோ ஆகியோரை, 2023  செப்டம்பர் 01 இலும், துணை ஆளுநர் கலாநிதி அன்டோனியோ கியாக்காரி மற்றும் அமைச்சரவையின் துணைத் தலைவர் கலாநிதி குண்டலினா ஃபெடரிகோ ஆகியோரை 2023 செப்டம்பர் 02 மரியாதை நிமித்தம் சந்தித்தார். இச்சந்திப்புகளின் பொது, புங்க்லியா பிராந்திய வாழ் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

ஆளுநர் அலுவலகத்தினால், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வழங்கும் பொருட்டு, நிறுவப்பட்ட உதவி மேசைத்திட்டம் குறித்து  Lecce ஆளுநர் விளக்கியதுடன், இத்திட்டமானது இடைத்தரகர்கள்/ முகவர்கள் ஆகியோர்களின் தலையீடு மற்றும் மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.

தூதுவர், ஆளுனரிடம் கலாசார மற்றும் தொழில்சார் பயிற்சி நிறுவனமொன்றை, Lecce  வாழ் புலம்பெயர் இலங்கையரின் நலன் கருதி, நிறுவுமாறு முன்மொழிந்ததுடன், எதிர்காலத்தில் Lecce அதிகார நிறுவனங்களினால், இலங்கை புலம்பெயர் மக்களின் முன்னேற்றம் கருதி எடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும், தூதரகத்தின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

இலங்கை தூதரகம்

ரோம்

14 செப்டம்பர் 2023

Please follow and like us:

Close