மியான்மரில் யாகி புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலங்கையிலிருந்து சிலோன் தேயிலை நன்கொடை

மியான்மரில் யாகி புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இலங்கையிலிருந்து சிலோன் தேயிலை நன்கொடை

மியான்மரில் யாகி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பில் உள்ள மியான்மர் தூதுவர் மார்லர் தான் ஹைக்கிடம் 227 கிலோகிராம் சிலோன் தேயிலைக்கான கிள்ளாக்கினை 2024, அக்டோபர் 14 ஆம் திகதி, திங்கட்கிழமை அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் கையளித்தார்.

இச்சவால்மிக்க நேரத்தில் இலங்கை அரசாங்கமும் மக்களும் தேயிலை நன்கொடைக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியமைக்காக மியன்மார் அரசாங்கத்திற்கு தூதுவர் ஹைக் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.  இரு நாடுகளும் தேரவாத பௌத்த தொடர்புகளின் அடிப்படையில் நீடித்த நட்பைப் பகிர்ந்து கொண்டதையும், வலுவான மக்களுக்கிடையிலான இடைத்தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டதையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவதானித்தார்.

மியான்மரில் மியாவாடி பகுதியில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் சிக்கியுள்ள எஞ்சிய 40 இலங்கை பிரஜைகள் தொடர்பாக இலங்கையின் தொடர் கவலையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்ததுடன், அந்த நபர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான அடிப்படையிலான இடர்பாடுகள்  குறித்து விளக்கினார். அவர்களை முன்கூட்டியே விடுவிக்க மியான்மர் அதிகாரிகளின் உதவியை அமைச்சர் ஹேரத் நாடினார். இவ்விடயம் தொடர்பில் மியன்மார் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை தூதுவர் பகிர்ந்து கொண்டதுடன், இலங்கையின் முறையீட்டை தெரிவிப்பதாகவும், இவ்விடயத்தில் தொடர்ந்து தீவிர ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கொழும்பில் உள்ள மியான்மார் தூதரக அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 அக்டோபர் 14

 

Please follow and like us:

Close