யுனெஸ்கோவில் 2023 தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் இலங்கை பங்கேற்பு

யுனெஸ்கோவில் 2023 தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் இலங்கை பங்கேற்பு

யுனெஸ்கோவின் 'கல்வியை மாற்றியமைப்பதன் மூலம் பன்மொழிகளை ஊக்குவிப்பதற்கான உள்நாட்டு மொழிகளைப் பாதுகாத்தல்' என்ற கருப்பொருளுக்கு  இணங்க பங்களாதேஷின் நிரந்தர பிரதிநிதிகள் குழு ஏற்பாடு செய்த யுனெஸ்கோ சர்வதேச தாய்மொழிகள் தினம் 2023 இல் யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு 2023 பிப்ரவரி 20 மற்றும் 21ஆந் திகதி பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தக் கொண்டாட்டங்களில் பழங்குடி சமூகங்களின் நிகழ்ச்சிகள், மொழிக் கண்காட்சி, கலாச்சார வெளிப்பாடுகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்களை வழங்குவதன் மூலம் யுனெஸ்கோ உறுப்பு நாடுகள் தமது கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளை வெளிப்படுத்தும் ஒரு சமையல் கலை கண்காட்சி உள்ளிட்ட  கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இலங்கையின் பங்கேற்பானது பாரிஸில் உள்ள திசரவி டான்ஸ் அகடமியின் வசீகரிக்கும் 'வெஸ்' நடன நிகழ்ச்சியால் குறிக்கப்பட்டதுடன், இது நாட்டின்  பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றான சடங்கு பேயோட்டுதல் விழாவை சித்தரிக்கின்றது.

இலங்கையின் தாய் மொழிகளான 'சிங்களம்' மற்றும் 'தமிழ்' ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியின் விளக்கமாகவும், 'வெளிப்பிள்ள' என்றும் அழைக்கப்படும் மணற் பலகையில் எழுதுவதன் மூலம் இலங்கை எழுத்துக்களைக் கற்கும் பழமையான பாரம்பரியம்  பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை நிரந்தர தூதுக்குழுவினர் 'கொக்கிஸ்' மற்றும் 'சிலோன் டீ' ஆகியவற்றை தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்கு பெயர் பெற்ற  'கித்துல் வெல்லம்' உடன் வழங்கினர். இக் கண்காட்சியானது இலங்கையின் வளமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் பல்வேறு மொழி மரபுகளை பார்வையிட பார்வையாளர்களை அனுமதித்தது.

சர்வதேச தாய்மொழிகள் தின நிகழ்வானது மொழியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன்,  பன்மொழி மற்றும் இலங்கையின் பங்கேற்பானது அதன் தனித்துவமான மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நாட்டின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.

இலங்கைத் தூதரகம்,

பாரிஸ்

2023 பிப்ரவரி 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close