பெய்ரூட்டில் உள்ள இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதரகத் தலைவருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

பெய்ரூட்டில் உள்ள இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதரகத் தலைவருடன் இலங்கைத் தூதுவர் சந்திப்பு

லெபனானுக்கான நியமனம் செய்யப்பட்ட இலங்கைத் தூதுவர் கபில ஜயவீர 2023 பெப்ரவரி 09ஆந் திகதி லெபனானின் பெய்ரூட்டில் உள்ள இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதரகத் தலைவர் மாத்தியூ லூசியானோவைச் சந்தித்தார்.

நியமனம் செய்யப்பட்ட தூதுவர், இடம்பெயர்வு, சட்டவிரோத இடம்பெயர்வு மற்றும் ஆட்கடத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கைப் பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவதில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பங்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் நலன் மற்றும் லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தொடர்பான விடயங்கள் குறித்த அரசாங்கத்தின் கொள்கை குறித்து தூதரகத் தலைவருக்கு விளக்கினார்.

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதரகத் தலைவர் விளக்கமளித்ததுடன், சம்பந்தப்பட்ட துறைகளில் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளைப் பாராட்டினார். இலங்கைத் தூதரகத்திற்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரி டி.டி. தேனுகா , நியமனம் செய்யப்பட்ட தூதுவருடன் இணைந்து இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

இலங்கைத் தூதரகம்

பெய்ரூட்

2023 பிப்ரவரி 10

Please follow and like us:

Close