இலங்கை சுற்றுலாத்துறையின் விஷேட அறிவித்தல்

இலங்கை சுற்றுலாத்துறையின் விஷேட அறிவித்தல்

இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதி சார்ந்த வகுப்பினரின் விஜயங்கள் குறித்து இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவரினால் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

2021 ஜனவரி 06ஆந் திகதிய சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் பிரகாரம், வியாபாரம் மற்றும் இராஜதந்திர வகுப்பைச் சாராத வெளிநாட்டு கடவுச்சீட்டினையுடைய கட்டணம் செலுத்திய பயணிகளின் வகுப்பைச் சார்ந்தவர்கள் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர்.

எனினும், https://srilanka.travel/helloagain/ எனும் இணையத்தளத்தில் காணப்படும் வழிகாட்டுதல்களை அவர்கள் பின்பற்றுதல் வேண்டும்.

வதிவிட வீசா கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டினையுடையவர்கள், இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டினையுடைய நெருங்கிய உறவினரை இணைத்திருக்கும் இலங்கைப் பிரஜைகள் சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர்.

  1. https://srilanka.travel/helloagain/ எனும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
  1. இங்கே தங்கியிருக்கும் 14 நாட்கள் வரை சான்றளிக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் இடரற்ற 1ஆம் நிலை ஹோட்டல் ஒன்றில் முன்பதிவினை மேற்கொள்வது தற்போது கட்டாயமானதாகும்.
  1. ஹோட்டல் முன்பதிவினை மேற்கொள்ளும் போது, பி.சி.ஆர். பரிசோதனைகள் (14 நாட்களுக்கு பரிசோதனை ஒன்றுக்கு 40 அமெரிக்க டொலர் x 3) மற்றும் கோவிட் காப்புறுதிக்கான 12 அமெரிக்க டொலர் ஆகியவற்றை செலுத்த வேண்டியது கட்டாயமானதாகும்.
  1. உறுதிப்படுத்திய மேற்கண்ட விவரங்கள் மற்றும் ஹோட்டல் முன்பதிவு, குறிப்பு இலக்கம் ஆகியவற்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் மின்னஞ்சல் முகவரியான 'dg@srilanka.travel' க்கு தெரிவிக்க வேண்டும்.
  1. மேற்கண்ட தகவல்கள் கிடைத்ததும் அவற்றை குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்திற்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பதுடன், பயணம் மேற்கொள்பவருக்கு அதன் பிரதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

2021 ஜனவரி 26

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close