மனித உரிமைகள், சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான அளவீடுகள் மீது மனித உரிமைகள் சபையில் இலங்கையின் மேம்படுத்தல்கள்

மனித உரிமைகள், சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான அளவீடுகள் மீது மனித உரிமைகள் சபையில் இலங்கையின் மேம்படுத்தல்கள்

மனித உரிமைகள் சபைக்கான இலங்கையின் தூதுக்குழுவினர் மனித உரிமைகள் மீதான கரிசனைகள், தேசிய பாதுகாப்பு முன்னெடுப்புக்கள் மற்றும் நல்லிணக்க முன்னுரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்து இன்று சபைக்கு தெளிவு படுத்தினர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 41ஆம் அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் கௌரவ மிச்சேல் பச்சலட் அவர்களால் 2019 ஜூன் 24ஆந் திகதி நிகழ்த்தப்பட்ட வாய்மொழிமூல மேம்படுத்தலுடன் தொடர்பான 2ஆம் நிகழ்ச்சி நிரலின் போது, இலங்கை தொடர்பான குறிப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னரான நிலைமைகளின் பின்னரான நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவு படுத்துகையில், ஏனைய முக்கியமான அளவீடுகளுக்கு மத்தியில், அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், தேவையான சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் வாயிலாக சட்டம் மற்றும் ஒழுங்கை மேம்படுத்துவதற்கும் தேவையான சிறப்பான நடைமுறைகளை ஏற்படுத்தியிருந்ததாக இலங்கை குறிப்பிட்டிருந்தது.

நாட்டிலுள்ள தீவிரவாத வலையமைப்புக்களை அழிப்பதற்கான தாக்கமுள்ள அளவீடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதன் காரணமாக, வன்முறை மற்றும் தீவிரவாதம் தொடர்பான விடயங்களில் இலங்கையிலுள்ள தேசிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக தலையீடு செய்து வருவதாக இலங்கை மேலும் வலியுறுத்தியிருந்தது.

அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2019 ஜூன் 25

--------------------------------------------------------------

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 41ஆம் அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழிமூல மேம்படுத்தலிலான இலங்கை தூதுக்குழுவின் அறிக்கை - 2019 ஜூன் 25

கௌரவ தலைவர் அவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 41ஆம் அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் கௌரவ மிச்சேல் பச்சலட் அவர்களின் வாய்மொழிமூல மேம்படுத்தலுடன் தொடர்பான 2ஆம் நிகழ்ச்சி நிரலின் கீழான விடயத்தினை கவனத்திற் கொள்வதில் பெருமையடைகின்றோம்.

மனித பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் கேள்விக்குட்படுத்தப்படும் முக்கியமான பல விடயப்பரப்புக்களில் மனித உரிமைகள் ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம். தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் வகிபாகம், வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்பான மூலோபாயம் மற்றும் செயற்றிட்டம் ஒன்றை நிறுவுதல், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாடற்றவர்களின் உரிமைகள், மனித உரிமைகளுக்கு கேடு விளைவிப்பதில் டிஜிட்டல் தொழிநுட்பத்தின் பயன்பாடு போன்ற விடயப்பரப்புக்கள் தொடர்பான பல்வேறு நன்மை பயக்கும் கருத்துக்களை நாங்கள் அவதானித்தோம். மேலதிக கலந்துரையாடல்களையும், சாத்தியமான வெளிப்பாடுகளையும் மேம்படுத்தி மனித உரிமைகள் பொறிமுறைகளுக்கான எமது ஒத்துழைப்புக்களை இந்த விடயப்பரப்புக்களில் நாம் தொடர்ந்தும் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.

கௌரவ தலைவர் அவர்களே, மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையின் போது இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் தொடர்பிலும் கருத்துக்களை தெரிவித்திருந்ததுடன், அது தொடர்பில் பின்வரும் விடயங்களை நாங்கள் இந்த சபையின் அவதானத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்:

  • முதலாவதாக, இந்த வருடத்தின் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையின் போது, ஐ.எஸ்.ஐ.எஸ். சிந்தனையினால் ஈர்க்கப்பட்ட நபர்களினால் முன்னெடுக்கப்பட்ட 258 அப்பாவி உயரிகளை காவு கொண்டதும், நூற்றுக்கணக்கான நபர்களுக்கு காயங்களை விளைவித்ததுமான கொடூரமான தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை அனுபவித்திருந்தது. இந்த பாரிய அச்சத்திற்கு பிரதிபலிப்பதற்கான உடனடியான நடவடிக்கையை இலங்கை மேற்கொண்டதுடன், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், சட்டம் மற்றும் ஒழுங்கை மேம்படுத்துவதற்காகவும் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. குறித்த தாக்குதல்களின் இரண்டு மாதங்களின் பின்னர், அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கானதும், சட்டம் மற்றும் ஒழுங்கை மீள நிறுவுவதற்குமான செயற்பாடுகளை சரியான சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை நிறுவுவதன் வாயிலாக நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என்பதனை இன்று இந்த சபையில் பகிர விரும்புகின்றோம். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஒழுங்கை பேணுவதற்காகவும், அத்துடன் தடுப்புக் காவலில் உள்ள நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவுமே இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது என்பது அவதானிக்கப்படல் வேண்டும். மேலும், வீதிகளில் பரிசோதனைகளை மெற்கொள்ளுதல் மற்றும் பாடசாலைகள், மத வழிபாட்டிடங்கள் மற்றும் இராஜதந்திர தூதரகங்கள் போன்ற பாதிக்கப்படக் கூடிய இடங்களுக்கான பாதுகாப்பு ஆகியன இன்னும் தேவையானதாகவுள்ளதுடன், அது பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு படையினர் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு அவசரகால நிலைமை இன்றியமையாததாகவுள்ளது. அந்த அடிப்படையில், அனைத்து பங்குதாரர்களினதும், பயங்கரவாதிகளின் கூறுகளை அடையாளம் காண்பதற்கும், மேலதிக தாக்குதல்களை தடுப்பதற்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரினரால் வழங்கப்பட்ட புரிதல் மற்றும் ஒத்துழைப்பு பாராட்டப்படுவது அவசியமானதாகும். விசாரணைகளை ஒருங்கிணைப்பதற்காக பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் உடனடியாக இருதரப்பு மற்றும் சர்வதேச பங்குதாரர்களினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை தனது நன்றிக்ளை தெரிவித்துக் கொள்கின்றது.
  • இரண்டாவதாக, பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று 3 வாரங்களின் பின்னர் இடம்பெற்ற கும்பல்களினால் சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதுடன், அதனுடன் தொடர்பான பல நபர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். 2019 மே 13ஆந் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் போது 151 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசியல் சார் நபர்களினால் தூண்டப்பட்டுள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. உயர் பாதுகாப்பு சூழலையும் தாண்டி, கைது செய்யப்பட்ட 48 மணி நேரத்தின் பின்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து நபர்களையும் முழுமையாக அணுகுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு படையினர் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் உத்தியோகத்தர்களினால் கையாளப்பட்ட தொழில்சார் அணுகுமுறைகள் மற்றும் அரசியல் மற்றும் சமயத் தலைவர்களின் விரைவான அழைப்புக்கள் போன்றன வன்முறைகள் மேலும் பரவுவதை தடுத்திருந்தது.
  • மேலும், இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடுகளை செலுத்துவதற்கான திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிதாக தாபிக்கப்பட்டுள்ள நட்டஈடுகளுக்கான அலுவலகத்தின் வாயிலாக சேதமடைந்த அனைத்து ஆதனங்களுக்குமான நட்டஈடுகளை வழங்குவதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
  • மூன்றாவதாக, ஆணையாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் போன்று, விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தல், சமானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக மதங்களுக்கிடையிலான சபையொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, ஆதலால், நலலிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே, சட்டத்தின் ஈடுபாடு, சரியான சட்டத்தின் பயன்பாடு மற்றும் பல்லினத்தவர்களுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுவானதும், அறிவிக்கப்பட்டதுமான கலந்தரையாடல்கள் மூலம் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் வாயிலாக ஏதேனும் வெறுப்பு அல்லது வன்முறையை தூண்டும் சம்பவங்கள் அவதானிக்கப்பட்டு வருகின்றன.
  • நாங்கள் அனைவரும் பொதுவானதொரு பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை தீவிரத்துவம் போன்ற சர்வதேச அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுகின்றோம் என்ற உண்மையை ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் நினைவுபடுத்துகின்றன. எமது மக்கள் பல நூற்றாண்டுகளாக இன மற்றும் மத வேறுபாடுகளின்றி மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததுடன், அவர்கள் தற்பொழுதும் கூட அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர். இந்த விடயத்தில், சமுதாயங்களுக்கு இடையில் பிளவுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, கலாச்சார புலமைகளுக்கு மதிப்பளித்து, அனைத்து விடயங்களிலும் இலங்கையின் ஒருமையான அடையாளத்தை நிலைநாட்டுவதற்கான பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
  • நான்காவதாக, நாட்டில் பயங்கரவாத வலையமைப்புக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதிலும், வன்முறை மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றுடன் தொடர்பான விடயங்களை இலங்கையின் தேசிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றன. இது தொடர்பில், அரச நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாட்டினை எடுத்தியம்புவதும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படுத்துவதும், அதற்கு எதிராக பங்களிப்புச் செய்வதும் மற்றும் அனைவருக்கும் பாரபட்சம் காட்டப்படாதிருப்பதனை உறுதிப்படுத்துவதுமான விடயங்களை வெளிப்படுத்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்களை நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.
  • இறுதியாக, கௌரவ தலைவர் அவர்களே, மேற்படி அளவீடுகளை எடுத்துக் கூறும் அதே வேளை, கலந்தரையாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும் அதே வேளை, மரியாதை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை பாதுகாப்பதனையும், அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதற்கான எமது தேசிய பொறுப்பினை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முறைமை மற்றும் இலங்கையின் சர்வதேச பங்காளர்களுடன் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றுவதனை இலங்கை அரசாங்கம் இந்த சபைக்கு பணிவாக தெரிவித்துக் கொள்கின்றது.
Please follow and like us:

Close