கொழும்பில் நடைபெற்ற இலங்கை - தென்னாபிரிக்க பங்காண்மை மன்றம்

கொழும்பில் நடைபெற்ற இலங்கை – தென்னாபிரிக்க பங்காண்மை மன்றம்

Image 01 (5)

அரசியல் மற்றும் பொருளாதார பிணைப்புக்களை மீளாய்வு செய்வதற்கும், இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்குமாக, இலங்கை - தென்னாபிரிக்க பங்காண்மை மன்றத்தின் ஏழாவது அமர்வு 2018 ஒக்டோபர் 16ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.

பங்காண்மை மன்றத்திற்கான இலங்கைத் தூதுக்குழுவானது, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (இருதரப்பு விவகாரங்கள்) சுமித் நாகந்தல அவர்களினால் தலைமை தாங்கப்பட்டதுடன், சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு திணைக்களத்தின் ஆசிய மற்றும் மத்திய கிழக்கிற்கான பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் சூக்லால் அவர்களினால் தென்னாபிரிக்காவிற்கான தூதுக்குழு தலைமை தாங்கப்பட்டது. பங்களிப்புச் செய்யும் பல்வேறு வரிசை அமைச்சுக்கள் மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் முகவர்களுடனான பல்வேறு கலந்துரையாடல்களில் இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கடல்வழி பிரச்சினைகள், பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்தல் ஆகியவற்றிலான உயர் மட்ட விஜயங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை பரிமாற்றுவதன் வாயிலாக அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரித்தல் ஆகியன தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. இரண்டு நாடுகளினாலும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக அடையாளங்காணப்பட்டுள்ள கல்வி, சுற்றுலாத்துறை, வன வாழ்க்கை, வனவியல், மீன்பிடி, நீர்ப்பாசனம், சக்தி, விளையாட்டு, விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கும் ஒத்துழைப்புக்கான விடயப்பரப்புக்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை இந்த மன்றம் பின்தொடர்ந்தது.

தென்னாபிரிக்க சந்தையை அணுகுவதற்கான தனது கோரிக்கையை இலங்கை மீளவும் வலியுறுத்தியது. தனியார் துறையுடனான கலந்துரையாடலை வலுவூட்டுவதற்காக உயர் மட்ட வியாபார தூதுக்குழுக்களை பரிமாற்றிக்கொள்வதற்கும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான வான்வழி தொடர்பினை கொண்டிருப்பதற்குமான தேவைப்பாட்டினை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நன்மைகளுக்காக, நடைமுறை மற்றும் நிலையான விடயங்கள் தொடர்பான கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தி, நிலுவையிலுள்ள உடன்படிக்கைகளை விரைவாக முடிவுறுத்துவது தொடர்பிலும் மேலும் கலந்துரையாடப்பட்டன. பரஸ்பர நலன்கள் தொடர்பான பல்தரப்பு விடயங்களில் ஒன்றாக இணைந்து தீவிரமாக செயற்படுவதற்கான பகிரப்பட்ட ஈடுபாட்டினை இலங்கையும், தென்னாபிரிக்காவும் மீள உறுதிபூண்டு கொண்டன. இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதனை நோக்கி செயற்படுவதற்காக, தென்னாபிரிக்காவுடனான பயனுள்ள ஒத்துழைப்பிற்கு இலங்கை பாராட்டுக்களை நல்கியது.

பங்காண்மை மன்றத்தின் எட்டாம் அமர்வு 2019ஆம் ஆண்டில் பிரிடோரியாவில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

23 ஒக்டோபர் 2018

Image 02 (5)

Please follow and like us:

Close