கிராம அபிவிருத்திக்காக இலங்கைக்கு உதவி செய்வதாக சேமால் உண்டோங் தலைவர் உறுதி

கிராம அபிவிருத்திக்காக இலங்கைக்கு உதவி செய்வதாக சேமால் உண்டோங் தலைவர் உறுதி

சேமாவுல் உண்டோங் அறக்கட்டளையின் தலைவர் லீ சியுங்-ஜாங், கொரியக்  குடியரசிற்கான இலங்கைத் தூதுவர் சாவித்திரி பானபொக்கேவை 2023 ஜனவரி 2 ஆந் திகதி சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய சேமாவுல் திட்டங்களின் வெற்றி குறித்து தூதுவர் பானபொக்கே கலந்துரையாடியதுடன், நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சேமாவுல் உண்டோங் அறக்கட்டளையின் பங்களிப்பையும் பாராட்டினார். இலங்கைக்கும் சேமாவுல் அறக்கட்டளைக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் தூதுவர் கலந்துரையாடினார்.

திட்ட முகாமைத்துவப் பணிப்பாளர் குவோன் லியுன் மின் மற்றும் சேமாவுல் அறக்கட்டளையின் பொதுமக்கள் உறவுகள் குழுத் தலைவர் எஸ்தர் ஜோங்யுன் கிம் மற்றும் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் சச்சினி டயஸ் ஆகியோரும் இச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இலங்கைத் தூதரகம்,

சியோல்

2023 ஜனவரி 30

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close