கன்பராவில் உள்ள இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகருக்கு எதிரான வழக்கில் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றி அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இராஜதந்திரிகள் தமது உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ கடமைகளுக்கு உதவுவதற்கு வீட்டு உதவியாளர்களை அழைத்துச் செல்வது வழமையான நடைமுறை என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட விரும்புகிறது. சர்ச்சைக்குரிய வீட்டு உதவியாளர் முழு மூன்று வருட காலப் பணியில் இருந்ததுடன், பிரதி உயர்ஸ்தானிகர் அவுஸ்திரேலியாவில் இருந்து புறப்படுவதற்கான நாளன்று பிற்பகல் நேரத்தில், அவரின் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
ஊழியரின் சம்பளமாக அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பளம் பரஸ்பர உடன்படிக்கைக்கு அமைவாக வேலை வழங்குனரால் வீட்டு உதவியாளருக்கு வழங்கப்பட்டதாக அமைச்சு திருப்தியடைந்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஆகஸ்ட் 17
Please follow and like us: