குடியரசுக் கட்டிடம்

குடியரசுக் கட்டிடம்

Old Pic

குடியரசுக் கட்டிடத்தின் அப்போதைய தோற்றம்

குடியரசுக் கட்டிடத்தின் அப்போதைய தோற்றம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அமைச்சரவை அலுவலகம் என்பவற்றை கொண்டுள்ள குடியரசுக் கட்டிடம், கொழும்பு கோட்டைப் பகுதியில் ஜனாதிபதி இல்லத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இது 1972 ஆம் ஆண்டு வரை செனட் கட்டிடம் என அறியப்பட்டது.

இக் கட்டிடமானது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கை சட்டவாக்க சபை இயங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டதுடன், 1930 ஆம் ஆண்டு சட்டவாக்க சபையின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடம் திறக்கப்படும் வரை இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில், இக்கட்டிடத்தினுள் பெரும்பாலான அரச திணைக்களங்கள் செயற்பட்டு வந்தன.

1948 இல் சுதந்திரத்தைத் தொடர்ந்து, இக்கட்டிடமானது சிலோன் செனட் சபை, பிரதமர் அலுவலகம், அமைச்சரவை அலுவலகம் மற்றும் வெளியுறவுகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான இல்லமாக காணப்பட்டது. 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக மாற்றமடைந்த போது, இக்கட்டிடம் குடியரசுக் கட்டிடம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வெளியுறவுகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு இரண்டாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சு தனியொரு அமைச்சிற்கு மாற்றப்பட்டதன் பின்னர், 1977 ஆம் ஆண்டு முதல் இக்கட்டிடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இக்கட்டிடத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் அமைச்சரவை அலுவலகம் என்பன செயற்பட்டு வருகின்றன.

*

குடியரசுக் கட்டிடத்தின் ஒருசில வரைபடங்கள்

(கீழ் காணப்படும் வரைகோட்டு சித்திரம் மற்றும் “Colombo Heritage”இலிருந்தான  'வெளிநாட்டு அமைச்சு' ஜான் பல்ட்வின் அவர்களினால் எழுத்தப்பட்டது. நிக்கி மெக்ஹார்க், சரா பல்ட்வின் மற்றும் கதையாசிரியர் மூலம் விளக்கப்பட்டுள்ளது. ஸ்டம்போர்ட் லேக் பதிப்பகம், 2003)

 

 

MFA Drawing-page-001

MFA- booklet entry-page-003

Please follow and like us:

Close