காலஞ்சென்ற இலங்கை மாணவனின் சடலத்தை மெல்போர்னிலிருந்து திருப்பி அனுப்புதல்

காலஞ்சென்ற இலங்கை மாணவனின் சடலத்தை மெல்போர்னிலிருந்து திருப்பி அனுப்புதல்

2020 ஜனவரி 15 ஆம் திகதி மெல்போர்னில் காலஞ்சென்ற இலங்கை மாணவனின் சடலத்தை திருப்பி அனுப்புவதற்காக, இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் மெல்போர்ன் - அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை மாணவனின் சடலமானது, மெல்போர்னில் நடாத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, ஜனவரி 26 ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு குடும்ப உறுப்பினர்களால் பெற்றுக்கொள்ளப்படும்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
24 ஜனவரி 2020
Please follow and like us:

Close