பொது இராஜதந்திரம்
தகவல் பரப்புதலின் அடிப்படையில், அரசாங்கத்திற்கும் வெளி செயற்பாட்டாளர்களுக்கும் இடையிலான அமைச்சின் இடைமுகமாகவும் மற்றும் இலங்கையின் தூதரகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளிநாடுகளில் இலங்கையின் பிம்பத்தை முன்வைத்து, அதன் நலன்களை மேம்படுத்துவதற்காகவும் பொது இராஜதந்திரப் பிரிவு செயற்படுகின்றது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் அமைச்சிலும், நாட்டிலும் பொதுவாக நடக்கும் நிகழ்வுகள் / சூழ்நிலைகளை சர்வதேச ஊடகங்களில் ஒளிபரப்புதல் தொடர்பான விடயங்களையும் இந்தப் பிரிவு உள்ளடக்குகின்றது.
அரசாங்கத்தின் நோக்கு மற்றும் தேசிய நலனுக்கான தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த நிலைப்பாடு, அமைச்சு தொடர்பான அம்சங்கள் மற்றும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை / சர்வதேச உறவுகள் தொடர்பான விடயங்கள் குறித்த ஊடகக் கேள்விகளுக்கு பதிலளித்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுடன் தொடர்புகொள்ளுதல் மற்றும் இலங்கை தொடர்பான பாதகமான செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் / சமூக ஊடகங்களில் கண்காணித்தல் மற்றும் எதிர்கொள்ளுதல் மற்றும் உள்நாட்டு அச்சு ஊடகங்கள் மூலமான செய்திகளின் தொகுப்பை அனைத்து தூதரகங்கள் மற்றும் அதிகாரிகளிடையே பரப்புதல் ஆகியன பொது இராஜதந்திரப் பிரிவின் கீழ் வரும் முக்கிய விடயங்களாகும்.