ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் சிங்கப்பூருக்கான பணிசார் விஜயம், 2023 ஆகஸ்ட் 21 இல் தொடங்கி 22 அன்று வெற்றிகரமாக முடிவடைந்தது.
அவருடைய விஜயத்தின்போது, ஜனாதிபதி விக்கிராசிங்ஹ அவர்களுக்கும், சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப், பிரதமர் லீ ஸீன் லூங், மற்றும் சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சர்களுக்கிடையில் இருநாடுகளுக்கிடையிலான, குறிப்பாக பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றாடல்சார் கூட்டுறவு ஆகியவை சார்பான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதனை நோக்காகக்கொண்டு பரந்த அளவிலான இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
காலநிலை மாற்றங்களின் விளைவால் ஏற்படும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்குமுகமாக, இரு நாடுகளினதும் கூட்டுறவினை விரிவுபடுத்துவதாற்கான முக்கியத்தையே மேற்கோள் காட்டியதுடன், பாரிஸ் உடன்படிக்கையில், கட்டுரை 6 இல், கார்பன் உமிழ்வு வரம்பு ஒதுக்கீடு (Carbon Credit) இற்காக கூட்டிணைந்து செயற்படுவதற்கான விளக்கக்குறிப்பு ஒன்றும், இப்பேச்சுவார்த்தையின்போது கைச்சாத்திடப்பட்ட்டது.
ஜனாதிபதி ஹலீமா யாகூப், இரு நாடுகளுக்கிடையிலான நட்பானது, மக்களுக்கும் மக்களுக்குமான உறவுகள் மற்றும் வெவ்வேறு துறைகளுக்கிடையிலான கூட்டுறவுகள் மூலம், ஆழமாக வேரூன்றியுள்ளதென குறிப்பிட்டார். அவர், எதிர்காலத்தில் இரு நாட்டு உறவுகளை மேலும் விரிவு படுத்திக்கொள்வதற்கான பாரிய அளவிலான நிச்சய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இருநாட்டு கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான முக்கிய துறைகளாக, உணவுப்பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்கச்சக்தியை குறிப்பிட்டதுடன், ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ சிங்கப்பூர் நிறுவனங்களின் குளிர் சங்கிலி முறைமை, இருப்புக்களஞ்சியம், மீளுருவாக்கச்சக்தி, குறிப்பாக சூரியசக்தி, காற்று மற்றும் பசுமை ஐதரசன் செயற்றட்டங்களில் முதலீடு செய்வதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ மற்றும் பிரதமர் லீ ஸீன் லூங் ஆகியோர் பொருளாதார ஒத்துழைப்பினை தீவிர முனைப்புடன் விருத்தி செய்வது பற்றி கலந்துரையாடினர். அண்மைய முனைப்பு இயக்கமான, 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (SLSFTA) இன் அமுலாக்கமானது, இரு நாடுகளுக்கிடையில், திடமான வர்த்தகம் மற்றும் முதலீட்டுத்தொடர்புகளை கட்டியெழுப்பியது என்பது இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக, வலுவான செயல்முறையொன்று அமுலாக்கப்பட்டதுடன், பல்வேறு துறைகளுக்கு, குறிப்பாக தாதியர் சேவைத்துறை மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புக்களுக்கு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்கள் உள்வாங்கப்பட உள்ளனர்.
இவ்விஜயத்தின்போது சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரான நெக் எல் ஹென், ஜனாதிபதி ரணில் விசக்ரம்சிங்ஹவுடன், புவியியல்சார் அரசியல் அபிவிருத்திகளுடன் அதிகரித்துச்செல்லும் பாதுகாப்புச்சவால்கள் பற்றி கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டார். ஒருங்கிணைந்த பாதுகாப்பு, பாதுகாப்பு கூட்டுறவுகள் ஆகியவற்றை எய்துவதன் பொருட்டு பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கு இணைந்து செயல்படுதல் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதாக இணங்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவும், பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் நெக் எல் ஹென் உம், கடல்சார்ந்த சிறிய நாடுகள் உலகளாவிய வர்த்தக நிலவரம் மற்றும் அதன் உறுதிப்பாடு என்பவற்றில் தங்கியுள்ளமை பற்றியும், அதனை சாதகமாக கையாண்டு எவ்வாறு இருநாட்டு மக்களின் எதிர்காலத்தை செவ்வனே அமையச்செய்ய, அதனை கையாளும் விதம் பற்றியும் கலந்துரையாடினர்.
சிங்கப்பூரின் நிலையான வளங்கள் மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர் க்ராஸ் பூ, ஜனாதிபதி விக்கிரமசிங்க ஹவிடம், சிங்கப்பூர் அரசின் அலியா , சிங்கப்பூர் பசுமைத்திட்டம், இயற்கை நகரத்திட்டம், மீள்தகைமையுடைய எதிர்காலம், மற்றும் பசுமைப்பொருளாதாரம் போன்ற விடயங்களில் சிங்கப்பூரின் பாரிய அளவிலான முனைப்பை விளக்கியிருந்தார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ இலங்கையின் காலநிலை வேலைத்திட்டம், உட்பட எதிர்வரும் ஆண்டு, உலகின் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் முனைப்பில் உருவாக்கப்படவிருக்கும், உலகின் முதல் காலநிலை கல்விசார் பல்கலைக்கழகம் பற்றி குறிப்பிட்டிருந்தார். இரு தரப்பினரும் காபன் உமிழ்வு வரம்பு ஒதுக்கீடு தொடர்பான விளக்கப்ப் பத்திரத்தில் கைச்சாத்திட்டமை, காலநிலை மாற்றங்களினால் முகங்கொடுக்கும் சவால்களை மட்டுப்படுத்துவதற்கான முயற்சியின் மைல்கல்லாக அமையுமென ஒப்புக்கொண்டனர்.
இவ்விஜயத்தின்போது, ஜனாதிபதி விக்கிரமசிங்ஹவுடன் இணைந்திருந்த பணிக்குழுவானது, ஜனாதிபதி தலைமை அலுவலர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர், திரு. சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றங்களுக்கான சவால்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. ருவன் விஜேவர்தன, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் திருமதி. சசிகலா பிரேமவர்தன ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.
இவ்விஜயமானது, சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சு- சிங்கப்பூர் (MCI )
இலங்கை உயர் ஸ்தானிகர் நிலையம்
சிங்கப்பூர்
2023 ஆகஸ்ட் 24