ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின், அமெரிக்காவின் உயர்மட்ட வணிகத் தலைவர்களுடனான நியூயோர்க்  சந்திப்பு

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின், அமெரிக்காவின் உயர்மட்ட வணிகத் தலைவர்களுடனான நியூயோர்க்  சந்திப்பு

 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின், 78 ஆவது கூட்டத்தொடரில் இணைந்ததுடன், 2023 ஆம் ஆண்டு, செப்டம்பர் 18 ஆம் திகதி, நியூயோர்க்கிலுள்ள Pierre Hotel இல் நடைபெற்ற, “இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்” என்ற தலைப்பிலான உயர்தர வணிக வட்டமேசை மாநாட்டு கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ பங்குகொண்டார்.

இந்நிகழ்வில் கூடியிருந்த வர்த்தகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கோடிட்டுக் காட்டியதுடன், பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்தி,வளமான நாடொன்றை உருவாக்கும் பயணத்தில், அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார்.

நாட்டின் மீதுள்ள தமது வர்த்தக ரீதியான ஆர்வம் தொடர்பில், கலந்து கொண்டவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதுடன், அமெரிக்க நிறுவனங்களை இலங்கைக்கு வருகை தந்து, முதலீடுகளை மேற்கொண்டு, நாட்டின் அபிவிருத்தி பங்காளிகளாவது குறித்து பரிசீலிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவுக்கான இலங்கைத் உயர் ஸ்தானிகர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவலர்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், BOI மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் இம்முக்கியம் வாய்ந்த வட்டமேசை மாநாட்டு கலந்துரையாடலில் கலந்துக்கொண்டதுடன், அமெரிக்க நிறுவனங்களுடன் ஒரு வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ள இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர்.

வணிக வட்டமேசை மாநாடானது, பொருளாதார வாய்ப்புகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துகிறது. இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதில் ஆர்வமுள்ள 45 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் பங்கேற்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Franklin Templeton, Cognizant, Procter & Gamble, UPS, Auerbach Grayson, Bell Flight, Shearman & Sterling, McLarty Associates, Alvarez & Marsal Holdings, Jockey International Inc, Tomorrow.io, Arbiter Partners, Ethos Asset Management, Ergotron, Roche Diagnostics, Briarwood Chase Management, Thatcher & Co.,  Amerasian Corporation, Rank One Computing, Perdue Agribusiness, Templeton Asset Management, Morgan Stanley Investment Management, Woods Capital LLC, Rushmore Advisors and Greenlink Global Consulting Inc. ஆகிய ஐக்கிய இராச்சியத்தின் முன்னிலை வகிக்கும் சில, "Fortune 500 நிறுவனங்களின்" உயர்மட்ட நிறைவேற்று அதிகாரிகள், கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அவர்களுடன், John Keells Holdings PLC, Aitken Spence PLC, Softlogic Holdings, Hayleys PLC, Gardiner Group of Companies/Galle Face Hotels, Abans PLC, Aggreko International Power, Melsta Corp ஆகியவற்றின் உயர்மட்ட நிர்வாகிகள் தலைமையிலான இலங்கையின் தனியார் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன், Colombo Stock Exchange, Capital Alliance, Standard Chartered Bank, Commercial Bank of Ceylon PLC, Hatton National Bank PLC, Hatch Works மற்றும் NCINGA ஆகியனவும் கலந்துரையாடலில் பங்குபற்றின.

இந்நிகழ்வானது, வாஷிங்டன் DC இல் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் மற்றும் சர்வதேச புரிந்துணர்வுக்கான வணிகச் சபை (BCIU) ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கை தூதரகம்

வாஷிங்டன் DC

2023, அக்டோபர் 03

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close