ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அவர்களால் ஒன்று கூட்டப்பட்ட உயர் மத சுதந்திரத்திற்கான மாநாட்டில் இலங்கை பங்கேற்றது

ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அவர்களால் ஒன்று கூட்டப்பட்ட உயர் மத சுதந்திரத்திற்கான மாநாட்டில் இலங்கை பங்கேற்றது

Pic 1

உயர் மத சுதந்திரத்திற்கான மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் அவர்கள் ஒருவர் தனது மதத்தினை மாற்றிக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் போதனைகள், வணக்கம், கிரிகைகள், நடைமுறை சார்ந்த நம்பிக்கைகளைஅல்லது மதத்தினை தனியாகவோ பிறருடன் கூட்டாகவோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது பகிரங்கமாகவோ நடைமுறைப்படுத்துதல் உள்ளடங்களாக மத மற்றும் மார்க்க சுதந்திரம்,சிந்தனா   சுதந்திரம் ஆகியவற்றை உயர்த்தி மேலோங்கச் செய்வதற்கு  இலங்கை அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுகின்றது எனக் குறிப்பிட்டார். உலக அரங்கில் சமாதானம் மற்றும் அமைதியை கட்டியெழுப்புவதில் மதங்களின் இயலுமையில் இலங்கையர்கள் நம்பிக்கை கொள்கின்றனர் என அவர் தெரிவித்ததுடன் இலங்கையில் சமாதானத்திற்கும் மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்குமான சவால்களை ஏற்றுக் கொண்டதுடன் அச்சவால்களை வெற்றி கொண்டு உயர் மத சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற படிமுறைகளையும் சுட்டிக்காட்டினார். சமாதானம், இரக்கம், நிம்மதி, நீதி, பொது மனிதாபிமானத்தை அங்கீகரிப்பதற்கான முன்னேற்ற செயற்பாடுகள் போன்ற உலகுக்கு தேவையான விடயங்களை வளர்ப்பதற்கு சர்வதேச சமூகத்துடன் இலங்கை இணைந்துகொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கருத்துக்கள் ஜூலை 24-26 ல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக்கேல் ஆர். பாம்போவினால் வாஷிங்டன் டி.சி.யில் நடத்தப்பட்ட சமய சுதந்திரத்தை முன்னெடுப்பதற்கான முதல் மாநாட்டுக்கான செயலாளரின் ஆரம்ப அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தன.

உலகளாவிய மத சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்களை கலந்தாலோசிப்பதற்கும் மத துன்புறுத்தல், பாகுபாடு ஆகியவற்றை வெற்றி கொள்வதற்கான தீர்வுகள் மற்றும் வகைகூறுதல்களை வளர்ப்பதற்கும் 80 நாடுகளின் அரசாங்க பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சிவில் சமுதாய பிரதிநிதிகள், அரசு சாரா மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கெடுத்தனர்.

மாநாட்டை அங்குரார்ப்பணம் செய்தவராக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக்கேல் ஆர். பாம்போ, அமெரிக்கா தனது அனைத்து வெளியுறவுக் கொள்கையிலும் முழு மனிதகுலத்திற்குமான உலகளாவிய உரிமையான மத சுதந்திரத்தை முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

நிகழ்ச்சியில் முக்கிய உரை அமெரிக்காவின் துணைத் தலைவர் மைக்கேல் பென்ஸ் அவர்களால்  வழங்கப்பட்டது. அதில் அவர் உலகின் சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் மத சுதந்திரம் வழிவகுப்பது போலவே, மத சுதந்திரம் மறுக்கப்படுவது பிற அடிப்படை சுதந்திரங்களையும் ஜனநாயக நிறுவனங்களையும் நிர்மூலமாக்கிவிடுகின்றது எனக் குறிப்பிட்டார்.

தூஷண / விசுவாசமற்ற சட்டங்கள்,
பயங்கரவாத குழுக்கள் உட்பட அரச சார்பற்ற துருப்புக்களால் முன்னெடுக்கப்படுகின்ற மத சுதந்திர அடக்குமுறை, சமய சுதந்திர அடக்குமுறைக்கான பயங்கரவாத எதிர்ப்புகள் தொடர்பாக இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட முக்கிய அறிக்கைகளை ஏற்றுக்கொண்ட நாடுகளில் இலங்கையும் இருந்தது.

முழு அறிக்கையை கீழுள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.mfa.gov.lk/statement-sfa-washigton-dc-24-26-july-2018/
இலங்கை தூதரகம்
வாஷிங்டன் டி.சி.

27 ஜூலை  2018

 

Pic 2

 

Pic 3

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close