சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த பெயர்களடங்கிய பட்டியல் ஒன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கு அமைவாக, தற்பொழுது 351 பெயர்களைக் கொண்டுள்ளதும், http://www.disappearance.itjpsl.com/#lang=tamil இன் வாயிலாக அணுகிக்கொள்ளக்கூடியதுமான இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் 2009 மே மாதத்தில் இலங்கை ஆயுதப் படையினரின் காவலில் இருந்த போது காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் நபர்களினுடையதாகும்.
பாராளுமன்ற சட்டம் ஒன்றினால் (2017ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சட்டம்)[1] தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகமானது, ஏனையவற்றுக்கு மத்தியில், காணாமல் போன நபர்களை தேடுதல் மற்றும் கண்டறிதல் மற்றும் குறித்த நபர்கள் எந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதனை தெளிவுபடுத்துதல், மற்றும் அவர்களது தலைவிதி; காணாமல் போன நபர்களின் சம்பவங்களை குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரசபைகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல்; காணாமல் போன நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்களை பாதுகாத்தல்; மற்றும் காணாமல் போன நபர்கள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்படக்கூடிய முறையான நிவாரணங்களை அடையாளங்காணுதல் போன்ற செயற்பாடுகளுக்கான அதிகாரமுடைய இலங்கையிலுள்ள நிரந்தரமானதும், சுதந்திரமானதுமான அமைப்பு ஆகும்.
ஆகையால், பின்வருவன தொடர்பிலான தகவல்களை இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள எவரேனும் அறிந்திருந்தால் காணாமல் போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்தி, ஊக்குவிக்கின்றது:
- சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான ஏதேனும் ஏனைய / மேலதிக / விரிவான தகவல்கள் மற்றும் அவர்கள் எவ்வாறான சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டார்கள்;
- எவரிடமும் / எந்த அமைப்பிடமும் காணப்படும், இந்த சட்டத்தின் 27ஆம் பிரிவினால் விபரிக்கப்பட்டுள்ள வகையில் காணாமல் போயுள்ளதாக கருதப்படத்தக்க பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் உள்ளடங்கலான ஏதேனும் நபர்களின் வேறு ஏதேனும் பட்டியல்கள் / தகவல்கள்
ஏதேனும் தகவல்கள் காணப்படின், அவற்றை பின்வரும் வகையில் தெரியப்படுத்தவும்:
[1] http://www.parliament.lk/uploads/acts/gbills/tamil/6016.pdf