போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போலோ ரேஞ்சலின் வருகை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துகிறது

போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போலோ ரேஞ்சலின் வருகை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துகிறது

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் போலோ ரேஞ்சல், பெப்ரவரி 24 அன்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெளிநட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார்.

போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவலகல் அமைச்சரை வரவேற்ற வெளிநாட்டு அலுவலகல் அமைச்சர் ஹேரத், இவ்விஜயம் சரியான நேரத்திலானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஜயமெனக் கூறினார். வளமான கலாச்சார பாரம்பரியத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் ஒத்துழைப்புக்கான மேலதிக வழிகளை ஆராய்வதற்கான உகந்த நேரம் இதுவென போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, தூதரக விவகாரங்கள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் சமகால உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து இரு அமைச்சர்களும் ஆலோசித்தனர். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பல்தரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பதற்கும் அவர்கள் ததத்தமது ஈடுபாட்டை உறுதிப்படுத்தினர். நீண்டகால வரலாற்று உறவுகளுக்கு அப்பால், வழக்கமான ஆலோசனைகள் மூலம், இருதரப்பு உறவுகளை அதிகரித்த பொருளாதார ஒத்துழைப்பு நோக்கி உயர்த்துவதில் இவ்விஜயம் ஊக்கியொன்றாக செயற்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அத்தினம் போர்த்துக்கேய வெளிநாட்டு அலுவலர்கள் அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்நிகழ்வில் கொழும்புத் துறைமுகம், கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், கொழும்பு தேசிய அருங்காட்சியகம் மற்றும் கங்காராம விஹாரை ஆகியவற்றிற்கான விஜயங்களும் இடம்பெற்றன.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டு அலுவலகள அமைச்சர் விஜித ஹேரத் உடன் வெளிநாட்டு அலுவல்களை அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் சிரேஷ்ஸ்தா அதிகாரிகள் கலந்து கொண்டனர். போர்த்துக்கல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இலங்கைக்கான போர்த்துக்கள் தூதுவர் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்களை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

2026 பெப்ரவரி 25

 

 

Please follow and like us:

Close