இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துமாறு பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் குரேஷி கோரிக்கை

இருதரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துமாறு பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் குரேஷி கோரிக்கை

DSC_4997

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி அவர்கள், 02/12/2019 திங்கட் கிழமையன்று, வெளிநாட் டுஅமைச்சர் னேஷ் குணவர்த்தன அவர்களை அமைச்சில் சந்தித்து,பிரதான துறைகளில் மேலும் பல்வகைப்படுத்தக்கூடியதும் மேம்படுத்தக்கூடியதுமான வளர்ந்துவரும் இருதரப்பு உறவுகள் பற்றிக் கலந்துரையாடினார்.

வருகைதந்த வெளிநாட்டமைச்சர், புதிதாகப் பதவியேற்றமைக்காக, அமைச்சர் குணவர்த்தன அவர்களுக்கு  வாழ்த்துக்களைத்  தெரிவித்து,  பாகிஸ்தான்  இலங்கையுடன் ஒன்றிணைந்து  பணிபுரிய  எதிர்பார்த்திருப்பதாகவும், வெகு விரைவில் அமைச்சர் குணவர்த்தன அவர்கள் தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்தார். விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காகவும், மிகவும் முக்கியமாக பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டியமைக்காகவும் இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகளை அவர் பாராட்டினார்.

நீண்டகால வர்த்தக உறவுகளைக்கொண்டிருக்கும் இரு நாடுகளும், தற்சமயம் முழுவதுமாக மேம்படுத்தப்படாததும்  பொருளாதார  உறவுக்கான  அதிக சாத்தியங்களைக் கொண்டிருப்பதுமான பொருளாதார கூட்டுறவினை வலுப்படுத்தி, உயர்ந்த நிலைக்கு இட்டுச்  செல்லவேண்டுமென பாகிஸ்தான்  அமைச்சர் வலியுறுத்தினார்.  தற்சமயம் இலங்கை,  பாகிஸ்தானுடனான  தனது  200  மில்லியன் அமெரிக்க டொலர் கடன்வரியை முழுமையாகப் பயன்படுத்தவில்லையென்பதைச் சுட்டிக்காட்டிய  அவர்,  குறிப்பாக  அந்த  வாய்ப்பை நாட்டுக்குப் பயனளிக்கக்கூடிய கால்நடை வளர்ப்புத்துறையில்  பயன்படுத்துமாறு அழைப்பு  விடுத்தார். இரு நாடுகளுக்குமிடையிலான முதலாவது  இருதரப்பு சுயாதீன  வர்த்தக  உடன்படிக்கையான, பாகிஸ்தான் - இலங்கை சுயாதீன வர்த்தக உடன்படிக்கையை இரு நாடுகளும் இணைந்து வலுப்படுத்த வேண்டுமெனத் தான் எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் அறிவித்தார்.

வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்குச் சாத்தியமான துறைகளை இனங்கண்டு, இலங்கை   வணிகத்துறையானது  பாகிஸ்தானுக்குச்  சென்று, அங்கு பொருத்தமான சகவணிகங்களுடன் இணைப்புக்களை ஏற்படுத்துவதற்கான ஒரு நிகழ்ச்சிநிரலைத் திட்டமிடுமாறும் அவ்வமைச்சர் கோரிக்கை  விடுத்தார்.  மேலும் அவர், பாதுகாப்புக்கூட்டுறவினைப் பலப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின்  முயற்சிகளைப் பாராட்டி,  அர்ப்பணிப்புள்ள அயல் நாட்டவர் என்ற வகையில் பரஸ்பரம் உதவும் நோக்குடன் இருதரப்பினரும் புலனாய்வுகளை மேலும் பகிர்ந்துகொள்ளவேண்டுமெனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் குணவர்த்தன தனது பாகிஸ்தானி சகாவை வரவேற்று, இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு  உறுதியான  ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட,  பாகிஸ்தானின் பல்வேறுபட்ட ஒத்துழைப்புக்களுக்காக,  இலங்கையின்  மனமார்ந்த  நன்றிகளைத் தெரிவித்தார்.  இலங்கை  ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னதாக உருவாக்கப்பட்ட அமைச்சரவைக்குப் பின்னர்

முதலாவதாக வருகை தந்த வெளிநாட்டமைச்சராக அவர் இருக்கிறார் என்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  அமைச்சர்  குணவர்த்தன அவர்கள், கூட்டுறவுக்கான  அனைத்து சாத்தியமான துறைகளிலும்  தாம்  தொடர்ந்தும்  பங்குகொள்வதற்கு  அர்ப்பணிப்புடன்  இருப்பதாகத் தெரிவித்து,  வளர்ந்துவரும் இருதரப்பு பொருளாதார கூட்டிணைப்பு மட்டுமன்றி, சுற்றுலாத்துறை மற்றும் உயர்  கல்வியிலும்  ஈடுபடுவதற்கு  எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து பௌத்த துறவிகள் குழுவொன்றினை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்த அமைச்சர் குரேஷி,வளர்ந்துவரும்   கலாச்சார  உறவுகளை  ஊக்கமளிக்கும் வண்ணம், தனது நாட்டில்  பயணம் செய்து, அங்கே பௌத்த சமயத்துடன்  தொடர்புள்ள அழகான  இடங்களைக்  கண்டுகளிக்குமாறு கோரினார்.

வெளிநாட்டமைச்சர் குரேஷி அவர்கள், இலங்கைக்கான தனது விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  மற்றும் பிரதமமந்திரி மகிந்த ராஜபக்ச ஆகியோர்களையும் சந்தித்தார்.

பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சருடன், வெளிநாட்டமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின்  பணிப்பாளர் நாயகமான கலாநிதி.  மொஹமட்  ஃபைஸல், பாகிஸ்தான் நடப்பு உயர்ஸ்தானிகர்  தன்வீர் அஹ்மட், பாதுகாப்பு அதிகாரி கேர்ணல் சஜ்ஜாத் அலி மற்றும் பாகிஸ்தான்  உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் அயேஷா அபுபக்கர் ஃபஹட் ஆகியோரும்  உடனிருந்தனர்.

இக்கூட்டத்தில் வெளிநாட்டமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசின்ஹ மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
2 டிசம்பர் 2019

DSC_5019

????????????????????????????????????

Please follow and like us:

Close