வெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி
வெளிநாடுகளில் உள்ள 67 இலங்கை இராஜதந்திரத் தூதரகங்கள் தொடர்பான வெளிநாட்டு ஆதனங்களை நிர்வகிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு ஆதன முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவு முக்கியமாக பொறுப்பானதாகும். இந்த முக்கிய பொறுப்பின் கீழ், தூதரகத்தின் சொந்த ஆதனங்களை நிர்மாணித்தல் மற்றும் புதுப்பித்தல், சொந்த மற்றும் வாடகை சொத்துக்களை பராமரித்தல் மற்றும் வெளிநாடுகளில் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தளபாட ஆதரவு ஆகியவற்றுடன் இந்தப் பிரிவு பரவலாக ஈடுபட்டுள்ளது. மேலும், அமைச்சு மற்றும் இலங்கைத் தூதரகங்களில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை வெளிநாடுகளில் இந்தப் பிரிவு கையாளுகின்றது.
மூலதனப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதன் ஆயுள் மற்றும் தரத்தை உறுதி செய்கின்றது. சொத்துக்கள், வரி மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான அனைத்து சுற்றறிக்கைகளையும் அனைத்து தூதரகங்களும் பின்பற்றுகின்றன என்பதையும் இந்தப் பிரிவு தொடர்ந்தும் கவனித்து வருகின்றது. அமைச்சின் நிதிகளை அர்த்தமுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் அவ்வப்போது ஆராய்ச்சிகளை நடத்துவதும், சுற்றறிக்கைகளை வெளியிடுவதும் இந்தப் பிரிவின் முக்கியமான பணியாகும்.