பொது மக்களுக்கான அறிவித்தல்

பொது மக்களுக்கான அறிவித்தல்

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவில், தற்போது மின்னணு ஆவண சான்றுறுதிப்படுத்தல் முறைமையில் (e-DAS) மெதுவாக நகரும் கணினி அமைப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு, அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு எடுக்கும் நேரத்தை அதிகரித்துள்ளதுடன், அன்றாட சேவைகளில் நெரிசலை தோற்றுவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது இந்த சிக்கலை நிவர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், தொழில்நுட்பக் குறைபாடு சரிசெய்யப்படும் வரை ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என, சான்றளித்தல்களை பெற்றுக்கொள்வதற்கு கொன்சுலர் விவகாரங்கள் பிரிவுக்கு வருகை தரும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொன்சுலர் விவகாரங்கள் பிரிவின் சான்றுறுதிப்படுத்தும் பிரிவு திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்களுக்காக காலை 7.00 மணிக்கு திறந்து, மதியம் 1.30 மணி வரை ஆவணங்களை ஏற்றுக்கொள்கின்றது. தற்போதைய தொழில்நுட்ப சிக்கலானது தீர்க்கப்படும் வரை, நாளாந்தம் 500 வாடிக்கையாளர்கள் / வருகை தருனர்கள் வரை மட்டுமே இந்தப் பிரிவினால் சேவைகளை வழங்க முடியும். இந்த காலகட்டத்தில், கொன்சுலர் விவகாரங்கள் பிரிவின் பணிகளை பொருந்திக் கொள்ளுமாறு பொதுமக்களை அன்பாக கேட்டுக்கொள்வதுடன், தங்களுக்கு ஏற்படும் ஏதேனும் அசௌகரியங்களுக்கு மிகவும் வருந்துகின்றோம்.

 

 

 

கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2019 அக்டோபர் 08

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close