வட அமெரிக்கப் பிரிவு

வட அமெரிக்கப் பிரிவு

அரசியல், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் காவல் துறைகளில் கவனம் செலுத்தி, அமெரிக்கா மற்றும் கனடாவுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளுடன் தொடர்புடைய விடயங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை வட அமெரிக்கப் பிரிவு முன்னெடுக்கின்றது. இந்தப் பிரிவு, அமெரிக்காவிலும் கனடாவிலும் அமைந்துள்ள நான்கு இருதரப்பு தூதரகங்கள் மூலம் அந்தந்த நாடுகளின் அரசியல் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றங்களை கண்காணிக்கின்றது.

அமெரிக்காவிலுள்ள இலங்கையின் இருதரப்பு வதிவிடப் பிரதிநிதித்துவத்தில் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கையின் தூதரகம் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உதவித் தூதரகம் ஆகியவை உள்ளடங்கும். கனடாவிலுள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதித்துவத்தில் ஒட்டாவாவிலுள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் டொராண்டோவிலுள்ள உதவித் தூதரகம் ஆகியவை உள்ளடங்கும்.

உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் உயர் மட்ட மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள், வருடாந்த கூட்டாண்மை உரையாடல்கள் போன்றவற்றுக்காக பல வகையான வழிமுறைகள் / பணிகள் / திட்டங்கள் மூலமாகவும் மற்றும் கொழும்பைத் தளமாகக் கொண்ட இரு நாடுகளினதும் வதிவிடத் தூதரகங்களுடன் தொடர்புகொள்வதற்கான முதல் புள்ளியாக இந்தப் பிரிவு செயற்படுகின்றது. இதன் பணிகளில், இலங்கை அரசாங்கத்தின் வரிசை முகவர்கள், கொழும்பிலுள்ள வதிவிடத் தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைத்து, முன்முயற்சிகளை மேற்கொள்வது உள்ளடங்கும்

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

பணிப்பாளர் நாயகம்

பெயர்: திருமதி. சோபினி கே.குணசேகர
தொலைபேசி: +94 112 343 355
மின்னஞ்சல்: shobini.gunasekera(at)mfa.gov.lk

பணிப்பாளர்

பெயர்: திரு. சத்துர பெரேரா
தொலைபேசி: +94 112 338 317
மின்னஞ்சல்: chatura.perera(at)mfa.gov.lk

பணிப்பாளர்

பெயர்திருமதி இசுரிகா கருணாரத்ன
தொலைபேசி: +94 112 473 942
மின்னஞ்சல்: isurika.karunarathne(at)mfa.gov.lk

பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பட்ட உதவியாளர்

பெயர்: திருமதி. கீதமாலி பெரேரா
தொலைபேசி: +94 112 343355

வட அமெரிக்கப் பிரிவு

தொலைபேசி (பொது): +94 11 7 024 897
தொலைநகல்: +94 112 323 228
மின்னஞ்சல்: north.america@mfa.gov.lk

Close