புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

????????????????????????????????????

இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டதையடுத்து, தனது கடமைகளை இன்று (31) பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்யசிங்க அவர்கள் இன்று காலை வேளையில் அமைச்சிற்கு வருகை தருகையில், தனது சக உத்தியோகத்தர்களினால் அவர் வரவேற்கப்பட்டார்.

இதற்கு முன்னர், 2018 ஏப்ரல் மாதம் முதல் தூதுவர் ஆர்யசிங்க அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வணிகப் பிரிவின் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.

1988ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு இணைந்த அவர், புது டில்லியின் இரண்டாம் செயலாளராகவும் (1989 - 1991), வொஷிங்டன் டி.சி.யில் அமைச்சராகவும், அதன் பின்னர் தூதுவர் அந்தஸ்த்துள்ள தூதரகத்தின் பிரதி தலைவராகவும் (2002 - 2006) கடமையாற்றினார். 2008 ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரையான காலப்பகுதியில் பெல்ஜியம், லக்சம்பேர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராகவும், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் கொன்சுல் நாயகமாகவும், அதே தருணத்தில் ஹொலி சீக்கான இலங்கையின் தூதுவராகவும் (2012 ஜூலை - 2018 மார்ச்) கடமையாற்றினார். 1995 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலும், மீண்டும் 2007 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியிலும், பொதுத் தொடர்பாடல் பிரிவிற்கு தலைமை வகித்த அதேவேளை, அமைச்சின் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வெளிநாட்டு சேவையிலிருந்து விடுமுறை பெற்றிருந்த நிலையில், 1993 - 1995 வரையான காலப்பகுதியில் அவர் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் தேசிய தகவல் உத்தியோகத்தராக கடமையாற்றினார். இலங்கை வெளிநாட்டு சேவைக்கு இணைவதற்கு முன்னர், இலங்கையின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்பான ரூபவாஹினியை நிறுவுவதற்கான முன்னோடியாக அவர் திகழ்ந்ததுடன், 1982 தொடக்கம் 1988 வரையான காலப்பகுதியில் சிரேஷ்ட அரசியல் நிருபர் / செய்தி ஆசிரியராக பணியாற்றினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்யசிங்க அவர்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலை இளமாணிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் கலை முதுமாணிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார். அவர் 2001 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் வொஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சர்வதேச சேவைகளுக்கான பாடசாலையில் சர்வதேச உறவுகள் கற்கையின் “ஹேர்ஸ்ட்” மாணவராவார்.

தூதுவர் ஆர்யசிங்க திருமணமானவராவதுடன், அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

31 ஒக்டோபர் 2018

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close