ஐக்கிய இராச்சியத்திலுள்ள தற்போதைய உயர் ஸ்தானிகரின் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுடன் சில செய்தித்தாள்கள் மற்றும் வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கைகள் தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்துகின்றது.
மூன்றாம் நாடுகளில் பெற்றுக்கொள்ளப்படும் இத்தகைய சிகிச்சைகள் உட்பட, அமைச்சின் சுற்றறிக்கைகள், நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் முன்னோடிகளின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பான நடைமுறைகள் மற்றும் அதனுடன் சார்ந்த செலவுகளை செலுத்துதல் ஆகியன அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகின்றது.
அனைத்து அரச அதிகாரிகளும் இலங்கையில் பெற்றுக்கொள்ளக்கூடிய 'அக்ரஹார' என்ற மருத்துவக் காப்புறுதித் திட்டத்திற்கு பங்களிப்புச் செய்கின்றார்கள். அதே போன்று, அத்தியாவசியமான மருத்துவ நடைமுறையொன்றைத் தொடர்வதற்கு அங்கீகாரமளிக்கப்படும் சந்தர்ப்பத்திற்கு உட்பட்ட வகையில், வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அனைத்து அதிகாரிகளுக்கும் மருத்துவத் திட்டமொன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தைப் போலவே, சிக்கலான மருத்துவப் பிரச்சினைகள் மீதான தாக்குதல்கள் உட்பட, தனிப்பட்ட விடயங்களில் ஊடகங்களுடன் ஈடுபட முடியாத அரச அதிகாரிகள் மீது அவதூறு சுமத்தப்பட்டு, அவர்களது தனியுரிமை மீறப்படுகின்றமை வருந்தத்தக்கது.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
29 மே 2020