வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரான்ஸ் தூதரகம் இணைந்து நடத்தும், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான மறைந்த பிரெஞ்சு தூதுவர் ஜோன் பிரான்ஸுவா பெக்டே அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு நினைவு ஆராதனை கொழும்பு 4, புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பிரான்ஸ் தூதரகம் இணைந்து நடத்தும், இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான மறைந்த பிரெஞ்சு தூதுவர் ஜோன் பிரான்ஸுவா பெக்டே அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு நினைவு ஆராதனை கொழும்பு 4, புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்ஸுவா பெக்டே அவர்களின்  திடீர் மரணம் குறித்து இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவர் ஆற்றிய சேவை மற்றும் ஈடற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவரது வாழ்க்கை மற்றும் பெருமிதமிக்க வாழ்வியல் வரலாற்றைக் கொண்டாடும் வகையில் இன்று காலை கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இலங்கைக்கான பரிசுத்த சீஷின் அப்போஸ்தலிக்க தூதுவர், பிரையன் உடைக்வே பேராயரினால் நெறியாழ்கை செய்யப்பட்டது.

மறைந்த தூதுவர், இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் எடுத்துக்கொண்ட அயராத முயற்சி மற்றும் அவரின் அர்ப்பணிப்பினை நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்துவதற்காக இராஜதந்திரிகள், கௌரவ தூதர்கள் மற்றும் பிரெஞ்சு சமூகத்தின் உறுப்பினர்களை இப்புனித நிகழ்வு ஒன்றிணைத்தது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரி, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தின் பொறுப்பதிகாரி மேரி நோயல் டியூரீஸ் ஆகியோர் இருதரப்பு உறவுகளை மேலும் உயர்த்துவதில் தூதுவர் பேக்டெவின் பங்களிப்பை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றினர்.

தனது குறுகிய காலத்தில், மறைந்த தூதுவர் இலங்கைக்கு பிரான்ஸ் ஜனாதிபதியின் முதல் விஜயம், ஆரம்ப இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை கூட்டுதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுதல் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த  பல்வேறு தருணங்களை ஏற்படுத்தியதில், மிக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

திறமையான இராஜதந்திர தூதுவரான பேக்டெ, தேசிய தகுதி வரிசையில் செவாலியர் பட்டம் பெற்றுள்ளதுடன், பிரான்சின் வெளிவிவகாரங்களுக்கான பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சானது, பிரெஞ்சு குடியரசின் அரசாங்கம், கொழும்பில் உள்ள பிரெஞ்சு தூதரகம், மறைந்த தூதுவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. நமது இருதரப்பு உறவுகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூர்ந்து போற்றப்படும்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

2024 மே 31

 

 

Please follow and like us:

Close