அமைச்சினால் வழங்கப்படும் கொன்சியூலர் சேவைகள் மற்றும் ஏனைய உதவிகள் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் வழிகாட்டல் மற்றும் அவர்களது முன்னிலையில், கொன்சியூலர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த கொன்சியூலர் நடமாடும் சேவைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அண்மையில் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களில் நடாத்தியது.
இரண்டு ஒருங்கிணைந்த கொன்சியூலர் நடமாடும் சேவைகளும் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடனும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடனும் 2019 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்த பிரதேச செயலகங்களின் அரச உததியோகத்தர்களின் நன்மை கருதி நடாத்தப்பட்டன.
ஒருங்கிணைந்த கொன்சியூலர் நடமாடும் சேவைகளின் போது, ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து அமைச்சானது திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்கு கொன்சியூலர் உதவிகள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்கியது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2019 ஜூலை 23