இலங்கை - சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஈடுபாட்டினை ஒருங்கிணைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன மீள உறுதிப்படுத்தியதுடன், இலங்கைக்கான துணைத் தூதரகத்தினை நிகோசியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

இலங்கை – சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு ஈடுபாட்டினை ஒருங்கிணைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன மீள உறுதிப்படுத்தியதுடன், இலங்கைக்கான துணைத் தூதரகத்தினை நிகோசியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

OP 6 (1)

சைப்ரஸின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடொலிடஸ் அவர்களை கடந்த வாரம் கலந்துரையாடல்களின் போது சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள், சைப்ரஸ் உடனான இருதரப்பு பிணைப்புக்களை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான ஈடுபாடுகள் குறித்து மீள உறுதிப்படுத்தினார். 1963ஆம் ஆண்டிலிருந்து இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஒருவர் சைப்ரஸ் நாட்டிற்கு அரசுமுறை விஜயமொன்றை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, சைப்ரஸ் குடியரசின் ஜனாதிபதி அதி மேதகு நிகோஸ் அனஸ்டன்சியாடெஸ் அவர்களை சந்தித்ததுடன், தொழில், நலன்புரி மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் சீடா எமிலியானிடோ அவர்களையும் சந்தித்தார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களான மாரப்பன மற்றும் கிறிஸ்டோடொலிடஸ் ஆகியோர் 2019 பெப்ரவரி 28ஆந் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் இலங்கைக்கான துணைத் தூதரகத்தினை நிகோசியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

தொழில், சுற்றுலா, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன முயற்சிகள் அபிவிருத்தி உள்ளடங்கலான ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது குறித்து அமைச்சர் மாரப்பன அவர்களும், சைப்ரஸ் அமைச்சர் கிறிஸ்டோடொலிடஸ் அவர்களும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். சைப்ரஸில் பணி புரியும் இலங்கை ஊழியர்கள் தொடர்பான பிரதான விடயங்கள் குறித்து கலந்துரையாடி, தீர்வு காண்பதற்கு சைப்ரஸ் அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கிறிஸ்டோடொலிடஸ் அவர்கள் அமைச்சர் மாரப்பனவிற்கு உறுதியளித்தார். மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு தொடர்பாக உடன்பட்ட விடயங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகளை மீளாய்வு செய்து கொள்வதற்காக 2020 ஜனவரி மாதத்தில் அரசியல் ஆலோசனைகளை கூட்டுவதற்கான பிரேரணையை இரண்டு தரப்பு நாடுகளும் வரவேற்றன.

சைப்ரஸ் குடியரசின் ஒற்றுமை மற்றும் ஆள்புல ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்வதற்கான அழைப்பை அமைச்சர் கிறிஸ்டோடொலிடஸ் அவர்களுக்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விடுத்தார்.

தொழில், நலன்புரி மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் சீடா எமிலியானிடோ அவர்களுடனான சந்திப்பின் போது, கடந்த 40 ஆண்டுகளாக இலங்கையர்களுக்கான விலைமதிப்பு மிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு தளமாக சைப்ரஸ் அமைவதனை நினைவு கூர்ந்து, அதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அனைத்து இலங்கை ஊழியர்களுக்குமான சம்பள அதிகரிப்பு மற்றும் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கான காப்புறுதி / ஓய்வூதியங்களை செலுத்துதல் ஆகியன அமைச்சரினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்த இரண்டு முக்கியமான விடயங்களாகும். சுற்றுலா துறை, விவசாயம் மற்றும் தகவல் தொழினுட்பம் ஆகிய துறைகளில் ஆற்றலுள்ள இலங்கையர்களை இணைப்பதற்கான பாரிய சந்தர்ப்பங்கள் உள்ளடங்கலாக குறித்த இரண்டு விடயங்களையும் சாதகமான வகையில் சைப்ரஸ் அரசாங்கம் கையாளும் என தொழில் அமைச்சர் எமிலியானிடோ அவர்கள் அமைச்சர் மாரப்பன அவர்களுக்கு உறுதிப்படுத்தினார். இலங்கை மனிதவளத் துறையிலான இலங்கைக்கும், சைப்ரஸிற்கும் இடையிலான உடன்படிக்கையின் வரைவை, அதிலுள்ள பிரதான அம்சங்களை பிரதிபலிப்பதற்காக இரண்டு தரப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.

இலங்கைக்கான துணைத் தூதரகத்தினை நிகோசியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் சம்பிரதாயபூர்வமான நிகழ்வில் உரையாற்றுகையில், தேசிய பொருளாதாரத்திற்கு இலங்கை ஊழியர்களால் வழங்கப்படும் விலைமதிப்பற்ற பங்களிப்பினை பாராட்டிய அதே வேளை, சைப்ரஸில் குறித்த அலுவலகத்தினை கொண்டிருப்பதற்கான இலங்கை தொழில் சமூகத்தின் நீண்டகால தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்காகவும், அதற்கு இணையாக சைப்ரஸூடனான இலங்கையின் நீண்டகால இருதரப்பு ஈடுபாடு மற்றும் நட்புறவு ஆகியவற்றிற்காகவும் குறித்த துணைத்தூதரகம் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் மாரப்பன குறிப்பிட்டார். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தொழிலில் ஈடுபடும் இலங்கைச் சமூகத்தினர், இராஜதந்திரிகள் மற்றும் சைப்ரஸின் ஊடக, சிவில் மற்றும் வியாபார சமூகத்தினரின் பங்குபற்றுதலுடன் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

பெறுமதி உட்சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்தியின் ஏற்றுமதியினை விஷேடத்துவப்படுத்தும் ஏலியன் பண்ணைக்கான சுற்றுப்பயணத்தினை உள்ளடக்கிய விஜயமாக இது அமைந்திருந்தது. ஆற்றலுள்ள விவசாயத்துறை பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான அமைச்சரின் கோரிக்கைக்கு பிரதிபலிக்கும் முகமாக, தமது நிறுவனத்தில் இலங்கையர்களுக்கான அத்தகைய தொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் சாதகமாக கவனம் செலுத்துவதாகவும், ஒரே மாதிரியான வசதிகளையுடைய விவசாய பெறுமதி உட்சேர்ப்பு மற்றும் ஏற்றுமதியினை அமைப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக, இலங்கைக்கான கற்கை சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்வதற்காகவும் ஏலியனின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் தியோடொரஸ் ஸாவொஸ் வாக்குறுதியளித்தார்.

சைப்ரஸ் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக, கொழும்பில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் ஐந்தாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1976ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பேராயர் மாகாரியஸ் III அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் அமைச்சர் மாரப்பன விஜயம் செய்தார். ட்ரூடோர்ஸ் நகரிலுள்ள கைக்கோஸில் வசிக்கும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களை சந்தித்த அமைச்சர், அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ரோமிலுள்ள சைப்ரஸிற்கான இலங்கைத் தூதுவர் தயா பெல்பொல, வதிவிட கொன்சுல் நாயகம் ரோஹன அம்பகொல்ல மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா சேமசிங்க ஆகியோர் இந்த விஜயத்திலும், இருதரப்பு கலந்துரையாடல்களின் போதும் இடம்பெற்றிருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

07 மார்ச் 2019

     OP 8 (1)_1
OP 10 (1)
Bilateral with the Cyprus Foreign Minister 1 (1)
Farm 5 (2)
Meeting with Minister of Labour
_MG_6619 (1)
_MG_6662 (4)
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close