ஊடக வெளியீடு: அஸர்பைஜானில் மூன்று இலங்கை மாணவர்களின் மரணம்

ஊடக வெளியீடு: அஸர்பைஜானில் மூன்று இலங்கை மாணவர்களின் மரணம்

அஸர்பைஜான் பாகுவிலுள்ள மேற்கு கஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் 2020 ஜனவரி 09 ஆந் திகதி ஏற்பட்ட தீ விபத்தால் புகையை சுவாசித்ததன் விளைவாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அஸர்பைஜானிலுள்ள அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள அஸர்பைஜான் தூதரகம் ஆகியன கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன.

உயிரிழந்த இலங்கையர்களின் உடல்களை திருப்பி அனுப்புவதற்காக தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகம் தற்போது அஸர்பைஜானிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி வருவதுடன், உடல்களை அனுப்புவது தொடர்பில் அவர்களது குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றது. இது தொடர்பாக அஸர்பைஜானிலுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அஸர்பைஜானிலுள்ள பல்கலைக்கழகமும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
11 ஜனவரி 2020
Please follow and like us:

Close