தித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு தேவை மதிப்பீட்டின் அடிப்படையில், பரிசீலிக்கப்பட வேண்டிய பன்முக ஆதரவு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துமுகமாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் சமீபத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துப் பேசினார்.
சமீபத்திய பாதகமான வானிலையைத் தொடர்ந்தான சூழ்நிலைகளின் போது வழங்கிய உதவிகள் உட்பட, இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு அமைச்சர் ஹேரத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் படி, ஒரே சீனா கொள்கைக்கு இலங்கையின் நீண்டகால ஆதரவை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியதுடன், சீனா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கமாக சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்தை இலங்கை தொடர்ந்து அங்கீகரித்து வருவதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு


