Media reports on Sri Lankan migrant workers

Media reports on Sri Lankan migrant workers

 

கடந்த மற்றும் தற்போது அச்சுப்பதிப்புகள், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயங்களில் கனிசமான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைளைப் பாராட்டும் அதேவேளை ஆக்கபூர்வமான செய்திகள் மற்றும் முன்மொழிவுகள், சம்மந்தப்பட்டவர்களுக்கு தேவையான சேவைகளை பல வழிகளில் வழங்குவது நன்மை பயக்கும்.

எப்படியாயினும், பகிரங்கப்படுத்தல் என்ற தோரணையில் அண்மைய காணொளிகள் மூலமாக  வலைத்தளங்களில் வலம் வரும் செய்திகள் எங்களது கவனத்தை ஈர்த்தன.

இவ்வாறான காணொளிகள் ஊடான செய்திகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் இத்தூதரகம் அதுசம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடைய கவனத்துக்கும் கொண்டு வருகின்ற செய்தியானது, நாங்கள் அனைவரும் மக்களுக்கு நற்சேவையை வழங்கவேண்டும் என்கின்ற நோக்குடன் செயற்படுகின்ற அதேவேளை எமது சேவையை நாடி வருபவர்களின் நலன்களையும், எமது உத்தியோகத்தர்களின் நலன்களையும், இவை அனைத்துக்கும் மேலாக எமது நாட்டினுடைய நலன்ளைப் பாதுகாத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்ற நோக்குடனேயே செயற்படுகின்றோம்.

கடந்த காலங்களில் ஊடகங்களினூடாக மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஊடக பங்களிப்பானது தூதரகத்துக்கு மிகவும் உதவியாக இருந்தது.

மேலும் சில சந்தர்ப்பங்கள் ஊடகங்கள் மூலமாக நன்மையளிக்கும் முடிவுகளாக அமைந்ததையும் உதாரணங்கள் மூலம் குறிப்பிட முடியும். ஆயினும் பயனளிக்காமல்போன சில சந்தர்ப்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றினுடைய கடைசி முடிவு மேலும் அது சம்மந்தப்பட்டவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும், இரு நாட்டு நல்லுறவுக்கிடையில் சிக்கலை உருவாக்கும் நிலையும் காணப்பட்டது.

ஒரு இலங்கைப் பணிப்பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக வழங்கப்பட்ட சவூதி நீதிமன்றத் தீர்ப்பை உதாரணமாக கூரலாம். இந்த விடயம் சம்பந்தப்பட்டபெண்ணின் அடையாளம் பற்றிய விபரங்களை ஊடகங்கள் பகிரங்கப்படுத்தவில்லை. அதன் காரணமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க இலகுவாக அமைந்தது. அப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட “கல்லெறிந்துகொல்லுதல்” என்ற தீர்ப்புக்கு எதிராக வாதாடி அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரியதற்கிணங்க, பின்னர் உரிய நபர் அதில் இருந்து விடுதலை ஆகி சிறைத்தண்டனையை மட்டும் முடித்த பிறகு இலங்கைக்குத் திரும்பிச்சென்றார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளங்களையோ அல்லது விபரங்களையோ ஊடகங்கள் வெளியிட்டு இருப்பின் அவருக்குக் கிடைக்கும் தீர்ப்பு மாற்றுத் திசைக்குச் சென்றிருக்கலாம். ஆகையினால் ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் தூதரகத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பாராட்டுவதோடு மேற்படி வழக்கை நல்ல முறையில் தீர்வு காணவும் முடியுமாக இருந்தது.

இந்த வகையில், கடந்த வாரங்களில் பரவிக்கொண்டிருக்கும் காணொளிகள் மூலம் வெளியாகி இருக்கும் செய்திகளானவை பொறுப்பில்லாமலும் நெறிமுறையற்ற  வகையிலும் தனிப்பட்டவர்கள் அல்லது குழுவினர் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மேற்குறிப்பிட்ட காணொளிகளில் தோன்றியவர்களை அவதானிக்கும் இலங்கையில் உள்ள அவர்களுடைய உறவினர்கள் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இது போன்ற நடவடிக்கைளானவை அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் தற்போதைய செயற்பாட்டின் முன்னேற்றங்களுக்கு இடையூறாக அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம்.

ஆகையினால் இது சம்மந்தப்பட்டவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படுமாறும், இவ்வாரான காணொளிகளை நேரடியாக சமூக  வலைத்தளங்களில் பதிவிட முன்னர் தூதரகம் போன்ற சம்பந்தப்பட்ட நிருவனங்களுடன்  பகிர்ந்துகொள்ளுமாறு வேணடுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு செய்வதன் மூலம்இலங்கைப் பணியாளர்கள் மேலும் நன்மை அடைவர்.

மேலும் தூதரகத்தின் கவனத்துக்குகொண்டு வரப்படும் அனைத்துப் பிரச்சினைகளையும் தூதரகம் கவனம் எடுத்து செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவதோடு, இது சம்பந்தப்பட்டவர்கள் தூதரகத்துக்கு உறுதுணையாகவும் ஒத்தாசையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள், இலங்கைப் பணியாளர்களின் பிரச்சினைகளை ஆக்கபூர்வமாகவும், நெறிப்படுத்தப்பட்டதாகவும் தூதரகத்தின் கனத்துக்கு கொண்டு வருவீர்கள் என நன்றியுடன் எதிர்பார்க்கிறோம்.

நாம் தங்கள் ஒவ்வொருவரினதும், சிறந்த ஆக்கபூர்வமான, அறிவார்ந்த விமர்சனங்களை வரவேற்பதுடன், இவை இலங்கை மக்களுக்கான எமது சேவையை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவியாய் இருக்கும்.

 

இலங்கைத் தூதரகம்
ரியாத், சவூதி அரேபியா
21 ஜனவரி 2019
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close