ஊடக வெளியீடு

ஊடக வெளியீடு

தெற்கு லெபனானின் நகோராவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைத்தலைமையகத்தில் இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான அமைதி காக்கும் படையினர் இருவர் காயமடைந்தமையை இலங்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஐக்கிய நாடுகளின் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அப்பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடப்பாடுகளை மற்றும் ஐக்கிய நாடுகள் பணியகத்தின் வளாகத்தின் தடையற்ற தன்மையை எல்லா நேரங்களிலும் இலங்கை உறுதிப்படுத்துகிறது.

பீரூட்டில் உள்ள இலங்கை தூதரகமானது, இலங்கை அமைதி காக்கும் படையினரின் மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களின் துரித குணமாதல் குறித்த அக்கறையின் காரணமாக ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையுடன் தொடர்பிலுள்ளது. உலகெங்கிலும் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரின் துணிச்சலான பங்களிப்பை இலங்கை மதிக்கிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 அக்டோபர் 11

 

Please follow and like us:

Close