வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை மீள அழைத்து வருவதில் முன்னுரிமையளிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க விளக்கினார்

வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை மீள அழைத்து வருவதில் முன்னுரிமையளிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க விளக்கினார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இன்று (07 மே 2020) இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணலொன்றில் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, 'கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் குறித்த இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்கள்' தொடர்பாக வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் குறித்து விளக்கினார்.

இன்று பதிவு செய்யப்பட்ட நேர்காணலின் முழுமையான எழுத்தாக்கப்பிரதி கீழே வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி – 1

இதுவரை, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இலங்கை மாணவர்களையும், இலங்கைக்குத் நாடு திரும்புவதற்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்திய மாணவர்களையும் மீள அழைத்து வரும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், இப்போது அரசாங்கத்தின் கவனம் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஏனைய எந்தவொரு நாட்டிலுமுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது திருப்பி விடப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார செயலாளராக, முழுமையான இந்த செயன்முறை குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் – 1

இதை ஒரு திசைதிருப்பும் விடயமாக நான் பார்க்கவில்லை. திரும்பி வர அனுமதிக்கப்பட்டு, நாட்டிற்கு மீள அழைத்து வருவது தொடங்கப்பட்டால், அது அதிகபட்சமான பாதிக்கப்படும் தன்மையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எப்போதுமே வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் நோக்காகும். அந்த அடிப்படையில்தான், தெற்காசிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைத்ததுடன், அது ஒரு வாரத்திற்கு முன்புதான் நிறைவடைந்தது. இப்போது மாணவர்களைக் கொண்ட பல குழுக்களும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக அவர்கள் மேலும் அழைத்து வரப்படுவர். ஒரு மாதத்திற்கு முன்னர் நாங்கள் சமர்ப்பித்த உண்மையான அமைச்சரவைப் பத்திரத்தில் நாங்கள் முன்வைத்த விடயமான, வெளிநாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட வேண்டிய வகைக்குட்பட்டவர்களாதலால், மாணவர் குழுக்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு இணையாக தொழிலாளர்களை அழைத்து வருவதிலும் சிறப்பாக கவனத்தை செலுத்தி, அவர்கள் மீள நாடு திரும்புவதை எளிதாக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துவதே வெளிநாட்டு உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் முக்கியத்துவமாகும். இந்த சூழலில், ஏராளமான இலங்கையர்கள் நாட்டிற்கு மீளத் திரும்பி வர விரும்பும் மாலைதீவை தற்போது நான் நோக்குவதுடன், குறிப்பாக மாலி தீவில் சுமார் 1200 - 1500 பேர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக வாழ்கின்றனர். குவைத் போன்ற இடங்களில், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளிலான பொதுவான கோவிட் பாதிப்புக்கும் மேலதிகமாக, குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பும் உள்ளதுடன், இந்தப் பொது மன்னிப்பை இழந்தால் அவர்கள் வெளியே வருவதற்கும், சட்டப்பூர்வமாக ஒருநாள் அங்கே மீளத் திரும்புவதற்கும் அதிக சிரமம் ஏற்படும் என்ற வெளிநாட்டு ஊழியர்கள் தரப்பினரின் கவலை குறித்து நாங்கள் அறிவோம். இந்த நேரத்தில் குவைத் அரசாங்கம் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்வந்துள்ளது. உண்மையில், நேற்று அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில், குறித்த பொது மன்னிப்புச் சலுகையை இலங்கை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு செயன்முறை குறித்து கலந்துரையாடி, குவைத் பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் ஈடுபடப் போகின்றார். நாங்கள் இந்த செயன்முறையைத் தொடங்குவோம், எனினும் இந்தக் கட்டத்தில் நாட்டிற்கு வர விரும்பும் அனைவரையும் அழைத்து வர முடியாது என்பது தொடர்பில் குவைத் அரசாங்கம் மிகுந்த விழிப்புடன் உள்ளது. எனவே, நாங்கள் அவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து சில பேச்சுவார்த்தைகளை இரு அரசாங்கங்களுக்கிடையில் நடாத்த வேண்டும். மீண்டும் கோவிட் தொற்று நோய் மிகவும் விரைவான வேகத்தில் பரவி வரும் பங்களாதேஷ் போன்ற இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிபுரியும் வெளிநாட்டிலுள்ள இலங்கையரின் பிரச்சினையும் உள்ளதுடன், அவர்களில் சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். மத்திய கிழக்கிலிருந்தும், ஏனைய இடங்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர் வகைகளை மீள அழைத்து வருவதில் இதேபோல் கவனம் செலுத்துவோம். ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு உள்ளூர் தனிமைப்படுத்தல் வசதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்வதே அமைச்சரவைப் பத்திரத்தின் இரண்டாவது அம்சமாகும். மூன்றாவதாக, பெருமளவிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் தற்போதைய இருப்பிடங்களில் தக்கவைத்துக்கொள்வதற்கும், உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு தொடர்ச்சியாக அவை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான இராஜதந்திரப் பிரதிநிதித்துவத்தை அமைச்சரவைப் பத்திரம் குறிப்பிடுவதுடன், இதனை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆதரவுடன் தூதரகங்கள் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றது. இந்தக் கட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன், ஏனெனில், வீசாவின் நீடிப்பு, வாடகை கோரும் நில உரிமையாளர், கட்டண நிலுவையைக் கோரும் வணிகப் பங்குதாரர், தங்குமிடம் தேடும் சிலர் மற்றும் தன்னுடன் தங்குவதற்கு ஒரு குடும்பத்தை நிர்ணயிக்கும் ஒருவர் அல்லது உணவு இல்லாத ஒருவர் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சில நேரங்களில் மருந்துகளைக் கோருதல் போன்ற அவ்வப்போது வரும் பிரச்சினைகள் தூதரகங்களின் தலையீட்டால் தீர்க்கப்படலாம். மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல், உலகெங்கிலுமுள்ள எமது தூதரகங்கள் வெளிநாடுகளிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் மதிப்புமிக்க உதவிகளை வழங்குகின்றன. இயற்கையாகவே எமது திறன் நிதி ரீதியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, எனினும் இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் அந்த நாடுகளிலுள்ள ஏனைய மனிதநேய அமைப்புக்கள், தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத அமைப்புக்களுடன் சேர்ந்து அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றோம்.

கேள்வி - 2

இப்போது புலம்பெயர்ந்தோருக்கான செய்தி என்ன? நீங்கள் குறிப்பிட்டது போல, அவர்களது வெவ்வேறு தேவைகள் மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகள் உள்ளன. எனவே அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கான கோரிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் அவர்கள் என்ன நினைக்க வேண்டும்?

பதில் – 2

புலம்பெயர்ந்தவர் ஒரு மாணவரா அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு நபரா என்பது புலம்பெயர்ந்த ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டிய ஒரு கேள்வியாகும். இதைத் தவிர, குறுகிய கால விஜயங்களை மேற்கொண்டு, அங்கே சிக்கியுள்ள சுமார் 3000 பேர் கொண்ட ஒரு வகையினர் உள்ளனர், அவர்களுக்கு அந்தத் தெரிவுகள் எதுவும் இல்லை எனினும், அவர்களும் நாட்டிற்கு மீளத் திரும்பி வர வேண்டும், ஆதலால், அநேகமாக தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களை பயன்படுத்தும் வகையில், சாத்தியமான அளவிற்கு தற்போதைய செயற்பாடுகளுக்குள் அவர்களையும் உள்வாங்க  முயற்சிக்கின்றோம். ஹோட்டல்களும் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், ஒருவரின் சூழ்நிலைகளைப் பற்றிய புறநிலை மதிப்பீட்டை மேற்கொள்வதே தெரிவுசெய்தவர்களுக்கான எனது ஆலோசனையாகும். நாடொன்றில், பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வரும் காலப்பகுதியில் யாரோ ஒரு நபர் வெளியே சுற்றித் திரிய முயற்சித்தால், அவர் அவரது கல்வியை இழக்க நேரிடும். மத்திய கிழக்கில் அல்லது வேறு ஏதேனும் நாட்டில் நீலக் கழுத்துப்பட்டை அல்லது வெள்ளைக் கழுத்துப்பட்டை போன்ற வேலைகளில் இருக்கும் ஒருவர், நாட்டிற்குத் திரும்பி வரும்போது அந்த வேலைக்கு மீளத் திரும்ப முடியாமல் போகலாம். காரணம், அந்த நாடுகள் மீளப் பெறுவதற்கு பின்வாங்குவதுடன், நபர்களைக் குறைத்தும் வருகின்றன. இலங்கையிலும் அதே நிலைமைதான். ஆனால், உங்களுக்கு ஏற்கனவே வேலை இல்லையென்றால், நீங்கள் இலங்கைக்குத் திரும்பி வரும்போது, நீங்கள் வேலைகளைக் கண்டறிந்து கொள்வது எளிதான விடயமல்ல என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துகொள்வது முக்கியமானதாகும் என நான் நினைக்கின்றேன்.

எனவே, 67 நகரங்களிலுள்ள எமது தூதரகங்களின் வலையமைப்பின் மூலமாக இந்தக் காரணிகள் மிகவும் கவனமாக அளவிடப்படுகின்றது என்பது அங்குள்ள மக்களுக்கு நாங்கள் தெரிவிக்கும் செய்தியாகும். திரும்பி வர வலியுறுத்துபவர்களுக்கு நாங்கள் செயற்பாட்டு ரீதியில் முன்னுரிமையளிப்போம். இது முகங்கள் அல்லது இணைப்புக்களைப் பார்ப்பதன் மூலமாக அல்ல, மாறாக, நாட்டில் இருப்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது, தேவையில்லாமல் அவர்களையும் நாட்டில் ஆபத்திற்கு உட்படுத்திக் கொள்ளாது இருக்கும் நிமித்தம், இந்தக் கட்டத்தில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதன் உண்மையான அவசியத்தையும், அவர்களைக் கொண்டு வந்து தனிமைப்படுத்துவதற்கான எமது திறனையும் பார்ப்பதன் மூலமாக இது முன்னெடுக்கப்படுகின்றது.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

07 மே 2020

 

English News Link:
Sinhala News Link:

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close