தூதுவர் இ. ரொட்னி பெரேரா ஜப்பான் பேரரசரிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு

தூதுவர் இ. ரொட்னி பெரேரா ஜப்பான் பேரரசரிடம் தனது நற்சான்றிதழ்களை கையளிப்பு


2023 ஜனவரி 19ஆந் திகதி டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையில் ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இ. ரொட்னி எம். பெரேரா தனது நற்சான்றிதழ் கடிதங்களை மாட்சிமை பொருந்திய பேரரசர் நருஹிட்டோவிடம் கையளித்தார். நற்சான்றிதழ்கள் வழங்கும் விழா ஜப்பானின் மாட்சிமை பொருந்திய பேரரசரால் நடாத்தப்படும் மிகவும் கௌரவமான மற்றும் முறையான விழாக்களில் ஒன்றாகும்.

இம்பீரியல் முகவரமைப்பின் விழாக்களுக்கான தலைவரால் அழைத்துச் செல்லப்பட்ட தூதுவர் பெரேரா, வரலாற்று சிறப்புமிக்க டோக்கியோ நிலையத்திலிருந்து இம்பீரியல் அரண்மனைக்கு மாட்சிமை பொருந்திய பேரரசரின் தனிப்பயனாக்கப்பட்ட லிமோசின் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பிரதாய நிகழ்வின் ஆரம்பத்தில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் மாட்சிமை பொருந்திய பேரரசர் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதனை தூதுவர் பெரேரா அன்புடன் ஏற்றுக்கொண்டார். பிரதமர் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா முன்னிலையில் தனது நற்சான்றிதழ்களை முறைப்படி சமர்ப்பித்ததன் பின்னர், தூதுவர் பெரேரா, மாட்சிமை பொருந்திய பேரரசர் நருஹிட்டோவுடன் உரையாடலில் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றார்.

1988 இல் இலங்கை வெளிநாட்டுச் சேவையில் இணைந்த தூதுவர் பெரேரா, நான்கு தசாப்தங்களாக தொழில்முறைக் கல்வி, ஆராய்ச்சி, உலகளாவிய பயணம், பேச்சு வாய்ப்புக்கள் மற்றும் உலகின் ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவுகள் சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்தியு;ளளார். கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான தூதுவர் பெரேரா, முகாமைத்துவத் தகவல் அமைப்புக்களில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம், நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். அவர் இலங்கையில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களிலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் உட்பட ஏனைய நாடுகளிலும் விஷேட பாடநெறிகளைப் பூர்த்தி செய்துள்ளார்.

1989 முதல் 1992 வரை டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இரண்டாவது செயலாளராக தூதுவர் பெரேராவின் முதல் வெளிநாட்டு இராஜதந்திர பணி ஆரம்பமானது. அதன்பிறகு, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்தின் முதல் செயலாளராகவும், கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றினார். அவர் இத்தாலிக்கான இலங்கைத் தூதராகவும் சைப்ரஸ், கிரீஸ் மற்றும் மோல்டாவுடன் இணைந்து ரோம் சார்ந்த ஐ.நா. உணவு மற்றும் விவசாய முகவரமைப்புக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றவர்), நோர்வே, பெல்ஜியம் லக்சம்பேர்க்கிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றவர்), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 2020 இறுதி வரை வொஷிங்டன் டி.சி. இல் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகவும் செயற்பட்டார்.

இலங்கைத் தூதரகம்,

டோக்கியோ

2023 ஜனவரி 25

Please follow and like us:

Close