இலங்கை ஜனாதிபதியை கொலைசெய்வதற்கான ஒரு சதியில் ஓர் இந்திய புலனாய்வு சேவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான ஊடக அறிக்கை

இலங்கை ஜனாதிபதியை கொலைசெய்வதற்கான ஒரு சதியில் ஓர் இந்திய புலனாய்வு சேவை சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பான ஊடக அறிக்கை

 

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொலைசெய்வதற்கான சதியொன்றில் ஓர் இந்திய புலனாய்வு சேவை தொடர்பு பட்டதாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் வெளியான ஊடக அறிக்கையின்பால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் ஈர்க்கப்படுகின்றது.

இது தொடர்பான ஊடக அறிக்கைகள் அடிப்படையற்றவை என்றும் தவறானவை என்றும் அமைச்சானது தெளிவுபடுத்த விரும்புகின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள், இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டங்கள் மற்றும் உளவுத்துறை பரிமாற்றங்கள் உட்பட பல்வேறு துறைகளை உள்ளடக்கியவாறு பலமாகவுள்ளன என்பதை வலியுறுத்துவதற்கு அமைச்சு விரும்புகின்றது. ஆகையால் ஜனாதிபதியின் கருத்துக்களில் இருந்து ஒருபகுதியை மாத்திரம் மேற்கோள்காட்டி  திரித்துக்கூறப்பட்ட உண்மைக்குப் புறம்பான ஊடக அறிக்கையானது, ஏனைய ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவதற்கு வழிவகுத்திருப்பதும் பொது மக்களிடையே புரியாத ஓர் அச்சத்தினை ஏற்படுத்தியிருப்பதும் வருத்தம் தருகின்றது.

இன்று காலைகூட, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில்  அரசாங்கத்தின் அனைத்து உயர் மட்டங்கள் உட்பட நெருங்கிய மற்றும் ஒழுங்கான தொடர்பை பேணும் வகையில் ஜனாதிபதி சிறிசேன அவர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2018 ஒக்டோபர் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close