ஆழ்ந்து வேரூண்டியிருக்கும் இருதரப்பு நல்லுறவுகளை மாலைத்தீவு வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லா சாயீட் பாராட்டுகின்றார்

ஆழ்ந்து வேரூண்டியிருக்கும் இருதரப்பு நல்லுறவுகளை மாலைத்தீவு வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லா சாயீட் பாராட்டுகின்றார்

DSC_5314

மாலைத்தீவுடனான சமுதாய பொருளாதாரத்தில் இலங்கையின் நீண்டகால கூட்டுபங்காளித்துவத்திற்காக மாலைதீவின் வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லா சாயீட் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அத்துடன் அவர் இந்த ஒத்தாசை இரு நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை மதிப்பு மற்றும் நல்லுறவை அதிகரிக்கும் ஆழ்ந்து வேரூண்டி உள்ள நட்பு என்பனவற்றின் பிரதிபலிப்பு என்றார்.

மாலைத்தீவின் வெளிநாட்டு அமைச்சர் தற்சமயம் இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரது இந்த விஜயத்தின்போது அவர் ஏற்கனவே வியாழக்கிழமை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்திருந்தார்.

கொழும்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் சாயீட் இலங்கை வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், சுற்றுலா, இளைஞர் அபிவிருத்தி, சமுதாய பாதுகாப்பு, கலாச்சாரம், சுகாதாரம், கல்வி மற்றும் ஆளுமை விருத்தி என்பன போன்ற துறைகளில் ஈடுபட்டு செயற்படுவதை பாராட்டினார்.

மாலைத்தீவு திரும்பவும் பொதுநலவாய நாடுகளுடன் இணைந்துகொள்ள இலங்கை வழங்கும் வலிமையான ஆதரவு மற்றும் ஒத்தாசையுடன் இணைந்த கூட்டு வர்த்தகங்களுக்கு மாலைத்தீவு வரவேற்பு வழங்கும் அதேவேளையில் கலந்துரையாடலின்போது அமைச்சர் குணவர்தன இரு நாடுகளுக்கிடையே இருதரப்பு வலயம் மற்றும் சர்வதேச மன்றங்களில் நீடித்து தொடரும் ஒத்தாசைகளின் முக்கியத்தை வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்குமிடையே கலாச்சாரம், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என்பனவற்றின் நீண்டகாலமாக தாமதமடைந்துள்ள இருதரப்பு ஆவணங்கள் என்பனவற்றை துரிதமாக முடிவுறுத்துவதற்கு இரு அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

2020 இன் முதலாவது காலாண்டின் இலங்கை - மாலைத்தீவு இணை ஆணைக்குழுவின் கூட்டத்தை கூட்டுவதற்கு இரண்டு அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்தார்கள். இது இரு நாடுகளுக்கிடையே இணை ஆணைக்குழுவில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றது.

விஜயம் செய்துள்ள அமைச்சர், அமைச்சர் குணவர்தனவுக்கு மாலைத்தீவுக்கு விஜயம் செய்யும்படி அழைப்பு விடுத்தார். இதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

கலந்துரையாடலில் மாலைத்தீவின் வெளிநாட்டு அமைச்சருடன் தூதுவர் ஒமர் அப்துல் ரசாக் மற்றும் துணைத் தூதரகத்தின் பிரதித் தலைவர் கதிஜா நஜிஹா என்போர் வருகை தந்திருந்தார்கள். அதேவேளை வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ரவினாத ஆரியசிங்க மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் என்போர் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் வருகை தந்திருந்தனர்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
2019 டிசம்பர் 06

 

DSC_5345
DSC_5354
Please follow and like us:

Close