இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் தூதரக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

கோவிட் - 19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், புதிதாக நியமிக்கப்பட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை திறம்பட செயற்படுத்துவதனை உறுதி செய்வதற்காகவும், மார்ச் 15 நள்ளிரவு 2359 மணி முதல் தூதரக சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பிரஸ்ஸல்ஸ், லண்டன் மற்றும் ஒஸ்லோ ஆகிய இடங்களில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

நியமிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை, அரசாங்கம் மேலதிக மூன்று இடங்களைச் சேர்த்து புதுப்பித்து, அச்சுறுத்தல் மிகுந்ததாகக் கருதப்படும் இடங்களிலிருந்து பணியாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து உள்வரும் விஜயங்களையும் கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஆதரித்து, மூடிவிடுதல் குறித்து சிந்திப்பதற்கான உண்மையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், அவசரநிலை பயண ஆவணங்களை வழங்குதல், சான்றிதழ்கள் மற்றும் மரணத்துடன் தொடர்புடைய ஆவணங்களை வழங்குதல் மற்றும் தேவையானதாக கருதப்படும் வேறு எந்தவித அவசர சேவைகளையும் வழங்குதல் என்ற வகையில் இலங்கைத் தூதரகங்கள் வழங்கும் தூதரக சேவைகள் 2020 மார்ச் 16 முதல் மட்டுப்படுத்தப்படும். இந்த சேவைகள் அந்தந்தத் தூதரகங்களால் ஒவ்வொரு விடயங்களின் அடிப்படையிலும், மற்றும் தூதரக வளாகத்தில் இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டவர்களின் தேவையற்ற செறிவூட்டலைத் தவிர்ப்பதற்காக தூதரகங்களிடமிருந்து முன் நியமனமொன்றை கட்டாயமாக ஒதுக்கீடு செய்து கொள்வதன் மூலமாகவும் விரிவாக்கப்படும்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
15 மார்ச் 2020
Please follow and like us:

Close