சட்டப்பிரிவு
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் ஏனைய வரிசை அமைச்சுக்கள், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதே சட்டப்பிரிவின் அடிப்படை தொழிற்பாடாகும். மேலும் இப் பிரிவானது வெளிநாட்டு அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் ஏனைய சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்வதேச முகவரமைப்புகள் ஆகியவற்றின் சட்டத்தன்மை தொடர்பான தகவல்களை அளித்து வருவதுடன், இருதரப்பு பேச்சுவார்த்தைகளைக் கையாளல், கைச்சாத்திடப்படுவதற்காக உடன்படிக்கைகளை தயார்ப்படுத்தல் மற்றும் உடன்படிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றது.
இந்த பிரிவின் முக்கிய நடவடிக்கைகளாவன: சட்ட ஆலோசனைகளை வழங்குதல்; இருதரப்பு, பல்தரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள், நீதித்துறை ஆவணங்களை வழங்கல், தகவல்களை அளித்தல்; இலங்கையினால் கையொப்பம் இடப்படும் அனைத்து இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய இலங்கைக்கான உடன்படிக்கை சுட்டெண்ணை பராமரித்தல்; வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புக்கள் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைகளில் கையொப்பமிட இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முழு அதிகாரத்துக்கான கருவியை உருவாக்கல்.