லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு
அமைச்சின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு ஒருங்கிணைக்கின்றது.
ஆர்ஜனடினா, பெலிஸ், பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கொஸ்டாரிகா, ஈக்வடோர், எல் சால்வடோர், குவாத்தமாலா, கயானா, ஹொண்டுராஸ், நிகரகுவா, மெக்ஸிகோ, உருகுவே, பனாமா, பராகுவே, பெரு, சுரினாம், வெனிசுவேலா, அன்டிகுவா மற்றும் பார்புடா, பார்படாஸ், பஹாமாஸ், கியூபா, டொமினிக்கன் குடியரசு, கிரெனடா, ஹயிட்டி, ஜமைக்கா, செயிண்ட் கிட்ஸ் ரூ நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ எட் அல் போன்ற 33 நாடுகளை இந்தப் பிரிவு கையாளுகின்றது.
இரு பிராந்தியங்களுடனும் வலுவான மற்றும் நெருக்கமானதொரு உறவைப் பேணுவதற்கும், கியூபா மற்றும் பிரேசிலிலுள்ள இலங்கையின் 02 வதிவிட இராஜதந்திரத் தூதரகங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களினூடாக பல வழிமுறைகள் / திட்டங்கள் மற்றும் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விஜயங்கள் வாயிலாக வசதிகளை மேற்கொள்வதற்காக லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிரிவு உதவுகின்றது. இந்தப் பிரிவு கொழும்பைத் தளமாகக் கொண்ட லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகளின் (பிரேசில் மற்றும் கியூபா) வதிவிடத் தூதரகங்களுடன் தொடர்பு கொள்வதற்கான முதலாவது தளமாக செயற்படுகின்றது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் பிராந்தியத்துடனான இலங்கையின் உறவுகளை தீவிரப்படுத்தும் நோக்கில், வர்த்தக மற்றும் பொருளாதார, கலாச்சார மற்றும் கல்வித் துறைகளில் இலக்கு வைக்கப்பட்ட முன்முயற்சிகளை உள்ளடக்கியதொரு செயற்றிட்டத்தை இந்தப் பிரிவு வகுத்துள்ளது.